உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

||--

அப்பாத்துரையம் - 22

நம்பித் தன் அருகில் கிடந்த இள நங்கையை அவன் கூர்ந்து நோக்கினான். அவளது அகத்தே கொந்தளிக்கும் புயல் பற்றிய தடம் எதுவும் இல்லாமலே அவள் முகம் அமைதியாயிருந்தது.

து கண்டு அவனது இதயத்தில் அவள் மீது அன்பும் கனிவும் பொங்கி வழிந்தன. 'இவளுக்கு நேர்மாறாக அந்தச் சீமாட்டி - எவ்வளவு எல்லையற்ற உணர்ச்சிக் கொந்தளிப்பு, எத்தனை பொறாமை பொருமல்கள், எத்தனை மயக்க தயக்க ஐயப்பாடுகள் அவளிடம் வளைந்து நெளிந்தன!' எப்படியும் கொஞ்ச நாட்களாவது அவளை அந்தச் சீமாட்டியைப் பார்க்காமலே இருப்போ' மென்று அவன் தனக்குள்ளே கூறிக் கொண்டான்.

-

இரவு செல்லச் செல்ல உறக்கம் சிறிது சிறிதாக அவர்கள் விழிகளை ஆட்கொண்டது, அவர்கள் மெல்லத் துயின்றனர். திடுமெனக் கெஞ்சி எழுந்தான் - எழுந்தபோது அவன்முன் ஒரு மாது நெட்டையான, கம்பீரமான மாதரசியின் உருவம் நின்றது. 'ஆ' பண்பார்ந்த நுண்ணய நேர்மையுடையவனென்று சொல்லிக் கொள்பவனாயிற்றே நீ! நீ இங்கே தெருவிலே கிடந்து கண்டெடுத்த இந்தக் காசு பெறாத பொது அணைங்கைக் கொண்டு வந்து ஒரு விளையாட்டுப் பொம்மைபோல் வைத்து எப்படி விளையாட முடிந்தது? நான் வியப்படைகிறேன், எல்லையற்ற வெறுப்பும் துன்பமும் கொள்கிறேன்!' என்று கூறியது அவ்வுருவம். கூறியதுடன் நிற்கவில்லை. அணங்கை அவன் பக்கத்திலிருந்து இழுப்பது போலிருந்தது.

இது ஒரு பொல்லாத கனவு அல்லது பயங்கர உருவெளிக் காட்சி என்று எண்ணி அவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். விளக்கு ஏற்கெனவே அணைந்து விட்டது என்று கண்டான். சிறிது கலக்கத்துடன் அவன் தன் வாளை உருவி அருகே வைத்துக் கொண்டான். அத்துடன் உகானையும் கூவி வரவழைத்தான். அவள் தானும் கலவரமடைந்தவளாய் உடனே ஓடி வந்தாள். ‘பக்கத்துச் சிறையிலிருக்கும் காவலாளைக் கூப்பிடு.' உடனே ஒரு விளக்கு கொண்டு வரச் சொல்' என்றான்.

‘எல்லாம் கும்மிருட்டாய் இருக்கிறதே!' நான் எப்படிப் போவது?' என்று மிரண்டாள் அவள். 'என்ன குழந்தை நீ!’

-