உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 22

து

158) | பாழ்பட்ட இடத்தில் இப்படி உறங்குகிறார்களே, அதிசயமாகத்தான் இருக்கிறது' என்று அவன் மனை காவலன் புதல்வனிடம் கட்டளை யிட்டான். அத்துடன் கோரெமிட்சு எங்கே? அவனுக்கு என்ன நேர்ந்தது?' என்றும் கேட்டான். 'அவன் சிறிது நேரம் காத்திருந்து பார்த்தான். ஆனால் தான் தேவைப்படுவதாகத்தோற்றாதது கண்டு வீடு சென்றான். விடியற் காலத்துக்குள் திரும்பி வந்து விடுவான்' என்று காவலன் சிறுவன் கேள்விக்குப் பதிலளித்தான்.

கெஞ்சியின் பணியாட்களில் ஒருவன் சக்கரவர்த்தியிடம் வில்லாளியாய் இருந்தவன். அவன் தன் வில்லின் நாணில் பயங்கரமான குணத்தொனி எழுப்பிக் கொண்டே தன் உச்சக் குரலில் ‘தீ! தீ!' என்ற கூச்சலிட்டுக் கொண்டே மனையகம் வந்தான். வில்லின் குணத்தொனி கெஞ்சிக்கு அரண்மனையின் எண்ணம் கொண்டு வந்தது. 'இச்சமயம் அரண்மனை வாணர் பெயர்ப் பட்டியல் வரிசை முடிந்திருக்கும். வில்லாளிகளின் வரிசை துவங்கி இருக்கும்!' ஆனால் உண்மையில் நேரம் அவ்வளவு ஆகவில்லை.

அவன் தட்டித் தடவித் திரும்பவும் அறைக்குச் சென்றான். அவள் அவன் விட்டுச் சென்றபடி கிடந்தாள். அது மட்டுமன்று. துணையிருந்த உகானும் அவளருகே தலை குப்புறக் கிடந்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நீ என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்? அச்சத்தால் உனக்கு மனப் பைத்தியம் பிடித்துவிட்டதா?' ஆம், இத்தகைய தனி இடங்களில் 'நரிப்பேய்கள்' மனிதர் மீது மாயம் பரப்பு மென்று நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் என் அருமைச் செல்வங்களே, நீங்கள் இவற்றுக்கெல்லாம் அஞ்ச வேண்டியதில்லை. நான் திரும்பி வந்து விட்டேன். அத்தகைய எதுவும் உங்களை அண்டவிடமாட்டேன்.' இவ்வாறு தானும் பாதி புலம்பிய வண்ணம் அவன் உகானைப் படுக்கையிலிருந்து பிடித்துத் தூக்கினான்.

'அந்தோ, ஐயனே! எனக்கு என்னவோ போலிருந்தது. மட்டற்ற பயத்தால் நான் முகங்கவிழ்த்துக் கீழே படுத்துவிட்டேன். பாவம், என் தலைவி என்ன பாடுபடுகிறளோ! அதை என்னால் நினைக்க முடியவில்லை' என்றாள் உகான். 'அப்படியானால்