உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(160) ||_

அப்பாத்துரையம் - 22

நிழல் கூட இல்லை. இனி என்ன செய்வது? யாரை உதவிக்கு நாடுவது? இப்போது உதவத்தக்கவர் புரோகிதர் ஒருவர்தான். ஒரு புரோகிதரைத் தான் வரவழைக்க வேண்டும்.

அவன் தன்னை அடக்கிக் கொள்ள முயன்றான். ஆனால் அவன் இளைஞன். அசைவின்றி விளறிய முகத்துடன் அணங்கு கிடந்த நிலைகண்ட போது அவன் உணர்ச்சிகள் அடக்க முடியாதபடி பீறிட்டுக்கொண்டு வெளிவந்தன. அவன் அழுது அரற்றினான். ‘மீண்டும் வரமாட்டாயா, கண்மணி! மீண்டும் உயிருடன் வா. என்னை இப்படிக் கூர்ந்து நோக்காதே!' உனக்காக நான் ஏங்குகிறேன்' என்று புலம்பியவாறு அவன் அவளை வாரி அணைக்க முயன்றான். ஆனால் இப்போது உடல் முற்றிலும் தணுத்துப்போய் விட்டது. முகம் நிலையான, பொருளற்ற, கடைசிப் பார்வை பார்த்து விட்டது!

தன் அச்சங்களிலேயே தனிப்பட்டு அழுந்திக் கிடந்தவள் உகான். இப்போது அவள் திடீரென்று தன்னுணர்வு பெற்று அதை மறந்து தன் தலைவி நிலை கண்டு கதறிப் புலம்பினாள். கெஞ்சி அவள் பிலாக்கணத்தைப் புறக்கணித்தான். அவன் நெஞ்சம் இப்போது வேறொரு சித்திரத்தில் ஆர்வமாகத் தோய்ந்தது.

அது ஒரு பழங்கதை. ஓர் அமைச்சர் தென்மாளிகை வழியாகச் செல்லும் சமயம் ஒரு பூதம் அவரை வழி மறித்தது. அமைச்சர் அச்சத்தினால் விறைத்து இது போலவே நிலத்தில் கிடந்த காட்சி கெஞ்சியின் நினைவுக்கு வந்தது. ஆனால் கதை முடிவில் அமைச்சர் மெல்ல மீட்சியடைந்து உயிருடன் தப்பினார்.

'அணங்கும் இறந்திருக்க முடியாது, உண்மையில் உயிர் நீத்திருக்க முடியாது' என்று கெஞ்சி ஆர்வமுடன் எண்ணினான். அவன் உகான் பக்கம் திரும்பி உறுதியான குரலில் அவளைக் கடிந்து கொண்டான். 'இதோ பார், நள்ளிரவில் இது போன்ற வரட்டுக் கூச்சல் தேவையில்லை. இதை நிறுத்து' என்றான்.

ஆனால் அவனளவில் இந்த ஆறுதலும் நம்பிக்கையும் கூட அவன் துயரைத் தணிக்கவில்லை அத்துயரம் அவனை மரமரப்படைய வைத்தது. உகானுக்குக் கட்டளையிடும் சமயமே அவன் மூளை வேலை செய்யவில்லை, என்ன செய்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியாது.