உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 22

(170) ||_ _ சகோதரியிடம் கூறாதே. துறவுமாதாகிய உன் அன்னையிடம் இன்னும் விழிப்பாயிரு. ஏனெனில் இத்தகைய காரியங்களில் நான் ஈடுபட்டிருந்ததை அவள் என்றும் அறியத் தாளமாட்டேன். அது பற்றிய எனது தலைகுனிவு மிகப்பெரிது.

கோரெமிட்சு: இத்தகைய அச்சம் எதுவும் வேண்டாம், ஐயனே! ஓரளவு இரகசியத்தைத் தெரிவிக்க வேண்டிய இடம் புரோகிதர்கள் பக்கமே. அவர்களுக்குக்கூட நான் ஒரு நெடுநீளக் கதைகட்டியே கூறியிருக்கிறேன்.

இது கேட்டுக் கெஞ்சியின் மனத்திலிருந்த பெரும்பளுவில் ஒரு பகுதி குறைந்தது.

கஞ்சியின்

மாளிகையிலிருந்த

அரண்மனைப்

பாங்கியர்கள் மனவேதனையுடன் மலைப்பும் திகைப்பும் கொண்டார்கள். 'தீட்டுப்பட்டுவிட்டேன், அரசவைக்குச் செல்ல முடியாது என்று கூறுகிறார். அதே சமயம் உட்கார்ந்து முணு முணுத்துக்கொண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டுமிருக் கிறார். இதற்கெல்லாம் பொருளென்ன?' என்று அவர்கள்

அங்கலாய்த்துக் கொண்டனர்.

கெஞ்சி மீண்டும் பேசினான்.

'செய்யவேண்டியதெல்லாம் வழுவின்றிச் சரிவரச் செய் என்று மட்டும் தான் நான் மீண்டும் உன்னை நினைவுப்படுத்த விரும்புகிறேன்' என்றான்.

கெஞ்சிக்குத் தெரிந்த இறுதி வினைகளெல்லாம் அரண்மனைக்குரிய வினைமுறைகளே. வேறு எதுவும் அவனுக்குத் தெரியாது. ஆகவே இறுதி வினைபற்றிப் பேசும் போதெல்லாம் அவன் உள்ளத்தில் அத்தகைய அகல்விரிவான ஆரவாரக் காட்சிகளே நிழலாடின. கோரெமிட்சு இப்போது அவைபோன்ற பாரிய வினைமுறைகளையே நடத்த வேண்டிய வனாயிருந்தான் என்பதுஅவன் எண்ணம்.

‘என்னால் இயன்றதனைத்தும் செய்கிறேன். ஆனால் அதில் ஒன்றும் பிரமாதம் இல்லை' என்று விடையளித்துக் கோரெ மிட்சு போக எழுந்தான்.