உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

|--

அப்பாத்துரையம் - 22

சென்றநாள் மாலைப்போதில் அவளுடன் அவன் அருகருகாகப் படுத்திருந்தபோது, அவனுடைய திண்சிவப்புப் போர்வையால் அவளை மூடியிருந்தான். அவள் இன்னும் அதே போர்வையைத்தான் அணிந்திருந்தாள் என்பது கெஞ்சிக்கு வழியிலேதான் நினைவுக்கு வந்தது. அவர்கள் இருவர் வாழ்க்கைகளும் எவ்வளவு பின்னிப் பிணைந்திருந்தன என்பதை இது குறித்துக்காட்டுவது போல் இருந்தது.

குதிரையின் சேணத்தின்மீது கெஞ்சிக்குச் சரியாக இருக்கை கொள்ளவில்லை. இதுகண்ட கோரெமிட்சு அவனருகாக நடந்து சென்றதுடன், அவன் கையையும் பற்றிக் கொண்டான்.ஆனால் ஒரு மண் மேட்டருகே வந்த சமயம் கைப்பிடி சற்றுத் தளர்ந்தது. கெஞ்சி தள்ளாடி நிலத்தின்மீது விழுந்தான். பெரு வேதனை யுடனும் கலக்கத்துடனும் அவன் விழுந்த இடத்திலேயே கிடந்தான். 'இந்தப் பயணத்தை முடிப்பதுவரை நான் உயிருடனிருக்கப் போவதில்லை. அந்த அளவு உடல்வலு என்னிடம் இல்லை' என்று அவன் ஏங்கினான்.

கோரெமிட்சுவின் உள்ளமும் கழிவிரக்கத்தால் உட்கிற்று. கெஞ்சி எவ்வளவு விரும்பியிருந்தாலும், நோய்ப்பட்டிருந்த நிலையில் அவனைத் தான் இட்டுக் கொண்டு வந்தது தவறு என்று அவன் எண்ணினான். இத்தகைய ஆபத்தான பயணத்திலிருந்து அவனைத் தான் உறுதியுடன் நின்று தடுக்காமல் போனதுபற்றி அவன் வருந்தினான். திகைப்பும் கலக்கமும் கலந்த உள்ளத்துடன் அவன் தன் கைகளை ஆற்றின் நீரில் தோய்த்தவண்ணம் கியோமிசுவி லமர்ந்த அன்னை ‘குவன்னாளை’ மனமார வணங்கி வழிபட்டான். கெஞ்சியும் நிலைமையின் கடுமையறிந்து தன்னைத்தான் ஊக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்து புத்தபகவானை உள்ளூர வேண்டிக் கொண்டான்.

தொழுகையின் ஆர்வம் தந்த வலுவுடன் அவர்கள் திரும்பவும் தம் பயணம் தொடங்கினர்.கோரெமிட்சுவின் தளராத்துணையுடன் கெஞ்சி தன் மாளிகை வந்து சேர்ந்தான்.

இரவோடிரவாக மேற் கொள்ளப்பட்ட இந்தப் பயணம் மடமையிலும் உச்சநிலை மடமைகளுக்குரியதென்றே மாளி கையில் அனைவரும் கருதினர். சில காலமாகவே இராக்காலங்