உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

177

என்னவோ, இருபது நாட்கள் ஆபத்தான நிலையில் நீடித்திருந்தபின், கெஞ்சியின் நிலை படிப்படியாகச் சீர்திருந்தத் தொடங்கிற்று. விரைவில் நோயின் அறிகுறிகள் முற்றிலும் மறைவுற்றன. முற்றிலும் குணமடைந்த அன்றே அவன் தீட்டுக்குரிய நாட்களும் முடிவடைந்தன. ஆகவே, சக்கரவர்த்தி இன்னும் தன்னைப் பற்றிப் பெருத்த கவலையுடனிருக்கிறா ரென்று கேள்விப்பட்டதே, அவன் அரண்மனையிலுள்ள தன் பணிமனைக்கே சென்று விடுவதன் மூலம் அவருக்கும் பேரவையோருக்கும் முழுத் தேறுதல் அளிக்க முடிவு செய்தான்.

இவ்விடத்துக்கு அவனை இட்டுச் செல்ல அவன் மாமனார் தம் சொந்த வண்டியுடன் தானும் வந்துவிட்டார். ஓரளவு அவனுக்கு மனச்சலிப்பே ஊட்டும் அளவில் அவர் அவன் உடல் நலத்துக்கான மருத்துவப் பண்டுவமுறைகளையும், பத்தியமுறை களையும் ஓயாது மீட்டும் மீட்டும் கூறிக் கொண்டே உடன் சென்றார்.

து

உலகில் உள்ள எல்லாப் பொருளுமே கெஞ்சிக்கு முதல் நெடுங்காலம் புத்தம்புதியனவாகத் தோற்றின. தன்னை நன்கு உணராதவன்போல அவன் புதிய ஒரு உலகில் நடமாடுபவன் ஆனான். ஆனால் ஒன்பதாவது மாதம் இருபதாவது நாளைக்குள் அவன் மீட்சி நிறைவுற்றது. அதன்பின்னும் நீடித்திருந்த முகத்தின் மெலிவும் விளறிய தோற்றமும் அவனுக்கு ஒரு புதுக் கவர்ச்சியளிப்பவையாக அமைந்தனவேயன்றி வேறல்ல..

அவன் இன்னும் அடிக்கடி வெட்டவெளியைக் கூர்ந்து உற்று நோக்கியதுண்டு. சில சமயம் காரணம் வெளிப்படாமல் திடுமெனக் கலங்கிக் கண்ணீர்விட்டுக் கதறி அழுவதுண்டு. இவற்றைக் கண்ட பலர் அவன் ஏதோ ஆவிகளின் செயலுக்கு ஆட்பட்டிருப்பது உறுதி என்று கருதினர்.

பல சமயம் அவன் உகானை வருவித்து அவளுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். ஒரு தடவை மாலையில் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பின் திடீரென்று அவளிடம் ஒரு தகவல் கேட்டான். 'ஒரே ஒரு செய்தி இன்னும் எனக்குப் பெருத்த மனக்குழப்பம் உண்டு பண்ணுகிறது. தான் யாரென்று அவள் ஏன் என்னிடம் கடைசிவரை சொல்ல மறுத்தாள்?