உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

201

சிறிதுகாலம் இருக்கக்கூட எண்ணத் தோன்றும். ஆனால் இனி இதுபற்றி நீங்கள் அறிவீர்கள்' என்றார்.

வயதுசென்ற அத்துறவி வெளிவருமுன் கெஞ்சி முதல்

துறவியின் குகைநோக்கி விரைந்தான்.

அவன்கண்ட சிறுமியின் எழில்வடிவம் அவன் உள்ளத்தை

நிறைத்தது.

எவ்வளவு கவர்ச்சிமிக்க சிறுமி!' என்ன மாய அழகு! மழைநாளிரவில் நண்பர்கள் கூறியதில் ஒருசிறிதும் தவறில்லை - நாடுசுற்றிப் பயணம் செய்பவர்கள் எதிர்பாராத சமயங்களி லெல்லாம் எதிர்பாராத மூலை முடுக்குகளில் இத்தகைய பேரழகைக் காணக் கூடும். தற்செயலாக நான்வெளியே உலாவப் புறப்பட்டது எவ்வளவு நல்லதாயிற்று! இல்லாவிட்டால் இத்தகைய மாயப் புதையலைக் கண்டிருக்கமுடியுமா! இச்சிறுமி யாராய் இருக்கக்கூடும்? அவளை எப்போதும் அருகே வைத்துக் கொண்டால் - சோர்வில் கிளர்ச்சியும் துன்பத்தில் ஆறுதலும் தேவைப்படும் நேரமெல்லாம் முன்பு அரண்மனை மாதரசியின்பக்கம் திரும்பியதுபோல அவள்பக்கம் திரும்பும் வாய்ப்புப் பெற்றால்.....? இவ்வாறு அவன் எண்ண அலைகள் எழுந்தெழுந்து ஓடின.

துறவியின் குகைமனையில் கெஞ்சி படுத்துக் கொண்டிருந்தான். வயதுசென்ற இரண்டாம் துறவியின் மனை மிக அருகிலேயே இருந்தது. ஆகவே கெஞ்சி படுத்து ஒரு சிறிதுநேரம் கழிவதற்குள் அவர் சீடரின் குரல் அவன் செவிகளில் விழுந்தது. அவர் கோரெமிட்சுவிடம் வந்து பேசினார்.

'நீங்கள் இவ்வளவு அருகாமையில் வந்து தவமிருப்பது பற்றி என் தலைவர் கேள்விப்பட்டார். வழியிலேயே தம்மனைக்கு வருகை தரவில்லையே என்று அவர் வருத்தம் தெரிவிக்கிறார். அவராகவே இளவரசரை வந்து கண்டிருக்கக்கூடும். ஆனால் அவர் திருமனை அருகிலேயே உள்ளது என்பது இளவரசருக்குத் தெரியாமலிருக்க முடியாது. தன் பயண நோக்கத்தைத் தெரிவிக்க விரும்பாத ஒரே எண்ணத்தினாலேயே வரத் தயங்கியதாகவும் இருக்கக்கூடும்.

துவகையில் தங்கள் கருத்து அறியாத