உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

(205

இரக்கமற்றவள். தொடக்கத்திலிருந்து அவளைப் பல வகையிலும் அவமதிப்புக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கினாள். நாள் தவறாமல் இத்தகைய தொல்லைகளுக்கு ஆளாகி அவற்றைத் தாங்க முடியாமல் அப்பெண்மணி உளமுடைந்து உயிர் நீத்தாள். இரக்கமற்ற நடத்தை ஒருவரைக் கொன்றுவிடாதென்று கூறுவதுண்டு. அது தவறு. ஏனெனில் என் உறவு முறையினளான அப்பெண் இந்த ஒரு காரணமாகவே நோய்வாய்ப்பட்டு மடிந்தாள்' என்றார் அவர்.

சிறுமி இந்தப் பெண்மணியின் குழந்தையாகவே இருக்க வேண்டும், அரண்மனை மாதரசி இளவரசன் ஹியோபுகி யோவின் தங்கையாதலால், அவர்கள் ஒப்புமையும் இது என்று கெஞ்சி தனக்குள்

காரணமானதேயாகும்'

து

கூறிக்கொண்டான்.சிறுமி மீதுள்ள அவன் கவர்ச்சி இப்போது முன்னிலும் பன்மடங்காயிற்று. அவள் மரபு சீரியது. இது நன்று. அவள் நாட்டுப்புற எளிமைகூட அவன் பயிர்ப்புக்கு ஆளாகிவிட்டால், ஒரு சிறப்பே யாகி விடத்தக்கது - அவளைத் தன் மாணவியாக்கிவிடும் உறுதியும் இப்போது அவன் உள்ளத்தில் எழுந்தது. விருப்பு வெறுப்புகள், உணர்ச்சிகள் உருவாகாத கள்ளமற்ற அவ்வெள்ளையுள்ளத்தைத் தன் விருப்பம்போலப் பண்படுத்தி உருவாக்க முடியுமென்றும் அவன் கருதினான்.

‘நீங்கள் கூறிய துயரக் கதைக்குரிய பெண்மணி தன் நினைவுச்சின்னம் எதனையும் விட்டுச் செல்லவில்லையா?' என்று மேலும் கேட்டான் கெஞ்சி. உரையாடலைக் குழந்தை பக்கம் திருப்பிச் சிறுமிபற்றிய தன் ஐயத்தை அவன் தெளிவுபடுத்த எண்ணினான்.

துறவி தொடர்ந்தார். 'குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் அது பிறந்த ஒரு சில கணங்களுக்குள்ளேயே அவள் இறந்தாள். அது ஒரு பெண் குழந்தை. அதன் பொறுப்பு என் தங்கைக்கே உரியது. ஆனால் அவள் மிகவும் உடல் நலிவுற்று அதை ஒரு சிறிதும் வகிக்க முடியாதவளாய் இருக்கிறாள்'

கெஞ்சிக்கு இப்போது யாவும் தெளிவாயிற்று.

‘எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது, அது உங்களுக்குப் புதுமையாகத் தோற்றலாம். இந்தக் குழந்தையை நான் எனதாகக்