உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

213

கலத்தைப் பணிந்து வாங்கிக் கொண்டு கெஞ்சி அன்புரை தந்தான். 'என் விருப்பப்படி நான் நடப்பதானால், இந்தக் குன்றுகளையும் ஓடைகளையும் விட்டு நான் எங்குமே செல்ல மாட்டேன். ஆனால் சக்கரவர்த்தியாகிய என் தந்தையார் என்னைப் பற்றிக் கவலையுடன் விசாரணை செய்து வருவதாக அறிகிறேன். இந்நிலையில் நான் தற்போது செல்ல வேண்டியவனாகிறேன். ஆயினும் மலர்ப் பருவம் ஓய்வுறுமுன் நான் திரும்பி வருவேன்' என்றான்.

இவ்வார்வ உரையுடன் ஒரு பாடலும் அவன் பாடினான். நகர்மாந்த ரிடம் சென்று விரைந்து வரப் பணிப்பேன் -

நகருமவர் நடைதாண்டி வன்காற்று வீசிப்

புகரருமிம் மலர்களைப் பூங் கொம்பரிட மிருந்து

பொம்மெனவே றாக்கிவிடும் எனும்சேதி உரைத்தே!

கெஞ்சியின் நா நயமும், குரல் நயமும், அவன் புகழ்ந்த புகழ் நயமும் முதியவரான துறவியின் உள்ளம் கவர்ந்து அவரை மகிழ்வித்தன. அவர் எதிர்பாடலால் மறுமொழி புகன்றார்.

‘பொன்னவிர் கொன்றை மலர் நலம் கண்டான் கல்நவில் குன்ற மலர்த்திசை நாடான்; அந்நிலை என்நிலை ஆகிடப் பெற்றேன்.'

'பொன்னவிர் கொன்றை யளவு அரியனல்லனே நான்’ என்று உவமை குறை காண்பவன் போலப் பணிவுடன் நகையாடினான் கெஞ்சி.

துறவி இப்போது இறுதி விடை குறித்த பிரிவின் அருங்கலம் ஒன்றை ஒரு பாடலுடனே கெஞ்சிக்கு அளித்தார்.

குகைமனையில் குறு மூங்கில் சிறு கதவம் திறந்து

குன்றிடையே புறம் போதல் தானுமிக அறியேன். தகையார்ந்தார் பலர்தாமும் தம்வாழ்வில் காணா

நகையார்ந்த உயிர்மலரென் கண்காணப் பெற்றேன்!

இப்படிக் கெஞ்சியின் அழகுமுக நயம் பருகுவார் போல அவர் அவனை நிமிர்ந்து நோக்கினார். அச்சமயம் அவர்கள் இருவர் கண்களுமே நீர் ததும்பி நின்றன.