உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

(221

பாட்டின் இனிமையும் ஆர்வ நலமும் கண்ட துறவு நங்கை அம்முதுமை நிறைந்த நிலையிலும் மகிழ்ச்சியுறாமலிருக்க முடியவில்லை, அப்புகழ்ச்சியில் பெருமையும் கொண்டாள். கையெழுத்து அழகியதாயிருந்ததுடன் மடிப்புகளும் மென்னய முடையவையாய் இருந்தன. எனவே அவன் நிலைகண்டு அவள் வருந்தினாள். மனச்சான்றும் கடமை யுணர்ச்சியும் மட்டும் தடுத்திராவிட்டால், அவள் மிக நயமிக்க விடையே அனுப்பி யிருப்பாள். 'அருகாமையில் வந்த சமயம் எங்களையும் வந்து காண அருள் கூர்ந்தமைக்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்னும் இங்கே நேரிடையாக எங்களைக் காண வருவீர்கள் என்றும் நம்புகிறோம். ஆனால் அப்படி வரும் சமயம்கூட ஏற்கனவே கூறியதற்கு மேலாக நான் எதுவும் கூற முடியாது. உள்ளடக்கமாக நீங்கள் அனுப்பிய பாடல் வகையில், அவள் மறுமொழி எழுதுவாளென்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். அவள் இன்னும் தன் முதல் மேல் வரிப்பாடத்தைக் கூட எழுத்துக்கூட்டி எழுதத் தெரியாதவள். அதற்கு நானே விடை வரைய வேண்டும்.

“உங்கள் மனஉறுதி உன்னில், புயலாடும் தங்கமலர் சிதறுந் துணையதுவும் கண்டிலேன். பங்கமிலாது பகரின் மயலாடும்

எங்கள்மனம் ஊசல் ஆடும் நிலையானதே!'

துறவியின் முடங்கலும் கிட்டத்தட்ட இந்தக் கருத்தையே குறிப்பாகக் காட்டிற்று.கெஞ்சியின் நெஞ்சம் பெருத்த ஏமாற்றம் கண்டது. இரண்டு மூன்று நாட்கள் சென்றபின் அவன் கோரெமிட்சுவை வரவழைத்து அவன் மூலம் துறவு நங்கைக்கும் ஒரு கடிதம் அனுப்பினான். அத்துடன் சிறுமியின் செவிலித் தாயாகிய சோனகனையும் கண்டு இயன்ற மட்டும் தகவல்கள் அறிந்து வரும்படி பணித்தான். கோரெமிட்சு கெஞ்சியின் உளப் பாங்கைப் பற்றித் தனக்குள் தானே பரிந்து பேசிக் கொண்டான். 'என்ன மெல்லுணர்ச்சி வாய்ந்த பசுமை உள்ளம் இவருக்கு!' என்று அவன் இரங்கினான். கோரெமிட்சு அவளை ஒரு கணம்தான் பார்த்தான். அவள் ஒரு சிறுகுழந்தை என்று முடிவு செய்ய அதுவே அவனுக்குப் போதுமாயிருந்தது. 'ஆனால் இளவரசருக்கு! அவர் பசுமை வாய்ந்த உள்ளம் அவரை இன்னும்