உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

(225

நிலையில் இப்போது ஒளிவு மறைவு எதற்கும் வழியில்லாது போயிற்று. இனி விரைவில் இது எங்கெங்கும் தெரியவந்து

டுமே, எல்லாரும் இதுபற்றி விவாதிப்பார்களே என்று அவள் துடித்தாள். அவளுக்கு நேர்ந்த இடர் அவளைத் திகிலில் ஆழ்த்திற்று. அதே சமயம் இதில் இரகசியத்திற்கு என்ன இருக்கிறது என்று அறியாத நிலையில், சக்கரவர்த்திக்கு இதை அவள் கூறவில்லை என்பது கண்டு வேறு சிலர் வியப்புற்றனர்.

இதுபற்றிய ஆய்வு எதிராய்வுகள் பல நடைபெற்றன. ஆனால் இத்தகைய செய்திகளில் நெருக்கடியுடன் தொடர் புடையவர்கள் மட்டுமே அதுபற்றிய விளக்கம் கூறமுடியும். ஓமியோபுவும் முதியவளான செவிலித்தாயின் மகளும்தான் காலை ஒப்பனைவேளையில் குளிப்பறையில் அவளது மாறுபாட்டை முதலில் கண்டனர். அவர்கள் திடுக்கிட்டனர். ஆனால் ஓமியோபு இதுபற்றியே பேச விரும்பவில்லை. தான் ஏற்பாடு செய்த இரகசியச் சந்திப்புத்தான் இத்தகைய கொடிய எதிர்பாராத விளைவைத் திடுமென உண்டுபண்ணி விட்டதோ என்ற கிலியும் அச்சமும் அவளைப் பீடித்தன. ஆனால் வேறு சில பிணிகள் காரணமாகத் தான் அவள் உண்மை நிலை நி அறியப்படாமல் போயிற்று என்ற செய்தி அரண்மனை எங்கும் இயல்பாகப் பரவிற்று. இதனை எல்லாரும் ஏற்றனர்.

சக்கரவர்த்திக்கு இப்போது அவளைப்பற்றிய பரிவும் கவலையும் பெரிதாயின. தூதர்கள் அவள் நிலைபற்றித் கணந்தோறும் அறிவித்து வந்தாலும், அவள் நிலைபற்றிய ஐயமும் கற்பனை அச்சமும் அவரை வாட்டின.

கெஞ்சிக்கு இச்சமயம் வழக்கமீறிய ஒரு பயங்கரக் கனவு உண்டாயிற்று. குறிகாரரைத் தருவித்து அவன் கேட்டான். அவர்கள் அதைச் சிறிதும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் அவர்கள் தெளிவாய் உணர்ந்து கூறினர். ‘கனவுக்குரியவன் ஒரு தகாச் செயலில் சறுக்கியுள்ளான். அது பற்றி விழிப்பாய் இருத்தல் வேண்டும்' என்றனர். இது கேட்டுக் கிலிகொண்டு, 'கனவு எனதன்று. ஒரு நண்பனுக்காகவே கேட்டேன்.' என்று கெஞ்சி கூறினான். ஆனால் தனக்குள் இந்தச் சறுக்கல் எதுவாயிருக்கக்கூடும் என்று அவன் சிந்தித்து நோக்கினான். இளவரசி நிலைபற்றிய செய்தி தெரிய வந்ததே