உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

(227

மிருந்து அவனுக்கு எத்தகைய புதுநம்பிக்கைக்கும் இடமில்லை. அவனும் எதுவும் எதிர்பார்க்கவில்லை. சென்ற சில மாதங்களில் சிறுமிபற்றிய அவன் ஏக்கம் குறையவில்லை. நேர்மாறாக அது பெருகியே வந்தது. ஆனால் நாட்கள் ஒவ்வொன்றாகக் கழிந்தன. நிலைமை மாற்றத்துக்கான எந்த அறிகுறியும் காணவில்லை.

இலையுதிர் காலம் முடிவை அணுகுந்தோறும், அவன் மனச்சோர்வு வளர்ந்து வந்தது. ஒரு நல்ல நிலாவெறிக்கும் இரவில் நன்முடிவுகளுக்கெதிராக அவன் மறைவில் அவளைச் சென்று காண்பதென்று துணிந்தான். ஆனால் அவன் புறப்படுமுன் மழை பொழியத் தொடங்கிவிட்டது. அவன் அரண்மனையிலிருந்தே புறப்பட்டதாலும், அவன் செல்ல வேண்டிய இடம் ஆறாவது வளாகத்திலிருந்ததாலும், அவ்வளவு தொலை மழையில் செல்வது நல்லதல்ல என்று கருதினான்.

என்ன செய்வதென்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவன் கண்கள் நீண்ட மரச்சோலைகள் சூழ்ந்த ஒரு பாழ்ங்கட்டடத்தின் மீது விழுந்தன. இந்தத் துயரடர்ந்த பாழ்ங்குடில் யாருக்குரியதா யிருத்தல்கூடுமென்று அவன் கோரெமிட்சுவைக் கேட்டான். வழக்கப்படி அவனுடனே சென்ற கோரெமிட்சு விடை கூறினான்.

‘ஆம். இதுதான் காலஞ்சென்ற அசேச்சி நோதைநகன் மனை ஆகும். ஒன்றிரண்டு நாளைக்குமுன் நான் இங்கே வந்து நலமுசாவினேன். துறவுநங்கை மிகவும் உடல் நலிவுற்றிருப் பதாகவும், தன்னுணர்வற்ற நிலை எய்தியுள்ளாளெனவும் கேள்விப் பட்டேன்' என்றான்.

'இதை ஏன் என்னிடம் முன்பே கூறவில்லை?' நான் அவள் குடும்பத்தாரிடம் என் ஒத்துணர்வு காட்டச் சென்றிருப்பேனே! இப்போதாவது உடனடியாகச் சென்று தகவலறிந்து வா' என்றான்.

கோரெமிட்சு சிறுபணியாளன் ஒருவனை மனைக்குள் அனுப்பினான். நிலைமை உசாவுவதற்காகவே கெஞ்சி வந்திருப்பதாகத் தெரிவிக்கும்படியும் கூறினான்.

தகவலறிவதற்காகக் கெஞ்சி ஆளனுப்பியுள்ளானென்றும், தானே அதற்காக வந்து வெளியே காத்திருப்பதாகவும் பணியாள்