உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




230

அப்பாத்துரையம் - 22

என்று அவர்கள் கலவரமடைந்தனர். ஆனால் குழந்தை அமையவில்லை, மேலும் கலகலவென்று பேசிற்று. 'ஊகூம்! நான் ஒன்றும் தெரியாமல் பேசவில்லை. இந்த இளவரசரைப் பார்த்ததனால் தன் உடல் நலம்கூடத் தேறிற்று. என்றுதான் பாட்டி சொன்னாளே! இப்போதும்...' குழந்தையின் துடுக்குப் பேச்சுகள் இடத்துக்கும் சூழலுக்கும் ஒவ்வாதவை என்றே பெண்டிர் கருதினர். அவள் பேச்சைக் கேட்டும் கேளாததுபோலப் பேசாதிருந்தனர். ஆனால் இப்பேச்சு கெஞ்சிக்கு மகிழ்ச்சி ஊட்டிற்று. அவன் தான் கருதியபடி நேரே அவளைக் காணாமலே திரும்பித் தன் வீடு சென்றான்.

போகும் போது அவன் குழந்தையின் பேச்சுகளை நினைத்துக் கொண்டான். அது இன்னும் சிறு குழந்தைத் தன்மை நிரம்பியதே என்பதை அவன்கூட ஒத்துக்கொள்ள வேண்டியதா யிருந்தது. ஆயினும் அத்தகைய சூதற்ற குழந்தை உள்ளத்தைப் பழக்கி உருவாக்குவது எவ்வளவு எளிது என்று அவன் எண்ணிக் கொண்டான்.

மறுநாள் அவன் நேரடியாகவே சென்று பார்வையிட்டான். போனவுடன் வழக்கப்படி சிறு தாள்மடிப்பில் ஒரு பாடல் அனுப்பினான்.

இளமை மடவன்னத்தின் இனியகுரல் கேட்டபின்னர் வளைய வளைய வந்தென் வன்படகு நாணலிடை நெளிந்து திரிவ தல்லால் நீள்நெறியில் செல்லாதே!’

இப்பாடல் சிறுமிக்காகவே எழுதப்பட்ட தோற்றத்துடன் குழந்தைப் பண்புடைய ய பெரிய பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது.ஆனால் அந்நிலையிலும் அது வனப்புமிக்க தாகவே இருந்தது. அதைக் கண்டதும் பெண்டிர் கலகலப்புடன் பேசிக்கொண்டனர். இது குழந்தையின் மேல்வரிச் சட்டத்துக்கு உகந்ததுதான் என்றார்கள்.

சோனகன் கெஞ்சிக்கு ஒரு குறிப்பு அனுப்பினான்.

'இந்த ஒரு நாள் முடியும்வரைகூடத் தன் உயிர் நில்லாதெனக் கருதி என் தலைவி தன்னை மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லும்படி பணித்தாள். இப்போதே பாதி வழி