உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

|--

அப்பாத்துரையம் - 22

அதுபோலவே சக்கரவர்த்தி புதிய சீமாட்டியிடம் கொண்ட ஆர்வப்பாசமும் கோக்கிடன் சீமாட்டி அறியாத ஒன்று. இந்நிலையில் சக்கரவர்த்தி எவ்வகையிலாவது சீமாட்டியையே தம் உரிமைத் துணைவியாகவும், புதிய இளவரசனையே தம் உரிமைப் புதல்வனாகவும் நடத்த மனமார விரும்பினார்; ஓரளவு அவ்வாறு நடத்தவும் முயன்றார்..ஆனால் இவ்வகையில் சூழல்கள் அவர்களுக்கு நேர்மாறாய் அமைந்திருந்தன.

பொழுதுபோக்குக் கேளிக்கை நேரங்களில் மட்டுமன்றி, உயர்ந்த அரசியல் அலுவல் நேரங்களில்கூடச் சக்கரவர்த்தி சீமாட்டியைத் தம் அருகில் அமர்த்திக் கொள்ளத் தலைப் பட்டார். சீமாட்டியினுடைய நடையுடை தோற்றங்களும் அச்சமயங்களில் அவ்வுயர்பதவிக்கு ஒரு சிறிதும் குறைவுபடா வகையிலேயே அமைந்திருந்தன. ஆயினும் அவள் நய நாகரிக நடைகூட ஒரு முரண்பாட்டைப் பிறர் கண்களிலிருந்து மறைக்கப் போதியதாய் இல்லை. அரசியல் அலுவல்களுக்குரிய அரண்மனை உயர்மாடங்களில் பொறுக்கி எடுத்த ஒருசில பேரரசுப் பெருமக்களே சக்கரவர்த்தியைத் தொடர்ந்து உள்ளே செல்லும் உரிமை பெற்றிருந்தார்கள். அத்தகையவருள் ஒருவருக்கு ஒப்பான குறைந்த குடியுரிமைத்தகுதிகூடச் சீமாட்டிக்கு இல்லை. சக்கரவர்த்தியின் பாசஉள்ளம் இதை மறுக்கவோ, மறக்கவோ முடியவில்லை.

சிலசமயம் சக்கரவர்த்தி இரவெல்லாம் சீமாட்டியின் தோழமையில் போக்கியும் மனநிறைவடைவதில்லை. பகல் நேரத்திலும் அவளையே உரிமைத் துணைவியாக உடன்கொள்ள முனைந்தார். பலதடவை பகல் இரவு, வார மாத வேறுபாடின்றி கிட்டத்தட்ட மெய் காவற் பெண்டிரைப் போல அவள் இடையீடில்லாமல் நிலையாகச் சக்கரவர்த்தியின் திருமுன்னிலையில் அமர்ந்திருக்க நேர்ந்தது.

இவற்றையெல்லாம் கோக்கிடன் சீமாட்டிகண்டாள். அவள் உள்ளத்தில் புதிதாக ஓர் அச்சம் எழத்தொடங்கிற்று. தான் போதிய அளவு முன்னெச்சரிக்கையாயிருந்து தடுக்காமல் போனால், புதிய இளவரசனிடம் சக்கரவர்த்தி காட்டிய ஆர்வம் எல்லை மீறிவிடலாம் என்று அவள் எண்ணினாள். அவனையே சக்கரவர்த்தி தம் அரண்மனைக் கீழ்மாடத்தில் தவிசேற்றிப்