உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

15

அவர் தன்னாலியன்ற மட்டும் கண்ணயர முயன்றார். ஆனால், ஏதோ ஒன்று தொண்டையைப்பிடித்துக் கொண்டிருப் பது போலத் தோற்றிற்று கண்கள் மூட மறுத்தன. சீமாட்டியின் மாளிகைக்கும் அரண்மனைக்குமிடையே இரவு முழுவதும் தூதர்கள் போய் வந்த வண்ணமே இருந்தனர். ஆனால், தொடக்கத்திலிருந்தே தூதர்கள் எவராலும் நல்ல செய்தி கொண்டு வரமுடியவில்லை. நள்ளிரவு சென்ற சிறிது நேரத்துக்கொல்லாம் மாளிகையில் அழுகையும் கூக்குரலும். எழுந்ததாகக் தெரிவிக்கப்பட்டது மாளிகையினுள்ளிருந்து தோழிப்பெண்கள் முறைப்படி செய்தி தெரிவித்து விட்டனர் சீமாட்டியின் இறுதி மூச்சு காற்றுடன் கலந்துவிட்டதென்று கேட்டதே சக்கரவர்த்தி உணர்விழந்து விட்டார். செய்தியை அவர் உள்ளம் வாங்கிக்கொண்டதோ இல்லையோ என்று கூடத் தெரிய முடியாதிருந்தது.

குழந்தை இளவரசனிடம் சக்கரவர்த்திக்குப் பாசம் பெரிதாயிருந்தது. ஆயினும் இச்சமயம் அவனை அரண்மனையில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று முடிவு செய்யப்பட்டது.என்ன நிகழ்ந்தது என்பதை அக்குழந்தையால் உணரமுடியவில்லை. பணியாட்கள் கையைப் பிசைந்துகொண்டு கலங்குவதையும் சக்கரவர்த்தி ஓயாது கண்ணீர் வடிப்பதையும் கண்டு ஏதோ கடுந்துயருக்குரிய செய்தி நடைபெற்றிருக்க வேண்டுமென்று அவன் எண்ணினான். சாதாரணப் பிரிவுகளில் ஒவ்வொருவர் முகத்தில் துன்பத்தின் நிழல் படர்வதை அவன் கவனித்திருந்தான். இப்போது காண்பது அதுவல்ல, இது கொந்தளிக்கும் பெருங்குமுறல் என்று கண்டு, இப்பிரிவு வழக்கத்துக்கு மேற்பட்ட பெரும் பிரிவாயிருக்க வேண்டு மென்று அவன் பிள்ளைமனமும் முடிவுசெய்து கொண்டது.

இறுதிவினைகள் தொடங்கிய சமயம் சீமாட்டியின் தாய் கதறி அழுதாள். தன்புதல்வியின் சடலத்திலிருந்து எழுந்த புகையிலே தன்சடலத்தின் புகையையே கண்டதாக அவள் துடித்தாள். அரண்மனை மாதர் ஏறிவந்த அதே வண்டியில்தான் அவளும் வந்திருந்தாள். வினை முறைகளும் நிறைந்த ஆரவாரத்துடன் அதாகோ என்ற இடத்தில் நடைபெற்றன. புதல்வியின் உடல் தன்முன் இருந்தவரை உடலில் உயிர் இல்லை