உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

19

'என்பார்வை மங்கலாயிருக்கிறது, கடிதத்தை ஒளி படும்படியாக நான் வைத்துப் பார்க்கிறேன்' என்று கூறி, அவள் கடிதத்தைத் துருவி நோக்கினான்.

கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

'காலஞ் செல்லச் செல்ல எண்ணங்கள் மங்கி மழுங்கிவிடும் என்றுதான் நான் எண்ணியிருந்தேன். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. நாட்கள், மாதங்கள் செல்லுந்தோறும், என்வாழ்க்கை மேன்மேலும் பொருளறற்றதாக, பொறுக்க முடியாத பாரமுடையதாக ஆகிவருகிறது. ஓயாது நான் குழந்தையைப் பற்றியே எண்ணிவருகிறேன். அவன் எவ்வாறு இருக்கிறானோ என்று கவலைப்பட்டும் வருகிறேன். நானும் அவன் தாயுமே இணைந்து அவன்வளர்ப்பைக் கவனித்து வருவோம் என்றுதான் பாவி நான் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தேன். அவ்வகையில் அன்னையின் இடத்தைத் தாங்களே மேற்கொண்டு, சென்றகாலத்துக்குரிய ஒரு சின்னமாக அவனை இட்டுக்கொண்டு வரமாட்டீர்களா?’

கடிதத்தின் வாசகங்கள் இவையே. இவற்றுடன் பலசெய்திகளும் ஒருபாடலும் இணைக்கப்பட்டிருந்தன. 'தகாசிப் படுகரில் தண்குளிர்ப் பனித்துளி

உகுதர ஊதை வீசிடும் பொழுதிலே

நகுதரும் அல்லி மென்முளை தனை நோக்கி

நெகுதரும் என் வன்நெஞ்சம் நேய முடனே!

உருவகப்படுத்தி அவர் இளவரசனைப் பற்றியே எழுதியிருந்தார். ஆனால், கடிதத்தை அவள் இறுதிவரை வாசிக்க முடியவில்லை. கடைசியில் அவள் தாயுள்ளம் பேசிற்று.

'நீண்டவாழ்வினால் மனக்கசப்பே மிகுதியாகும் என்பது எனக்குத் தெரிந்திருந்தும், நான் நெடுநாள் இந்த உலகத்தில் தங்கியிருந்துவிட்டேன்'. அதன் பயனாகத் 'தகாசகோ’வின் செந்தூரமரநிழலைச் சென்றடைந்தாலும் தலைகுனியவே நேரும்படி அவ்வளவு பெரிய வெட்கக்கேட்டுக்கு ஆளாய் விட்டேன். அப்படியிருக்க, கூடகோபுரங்கள் நூறுகொண்ட அரண்மனையின் அகலிடமெங்கும் நான் எவ்வாறு உலாவத்