உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

27

எரியும் பந்தத்தை உச்ச அளவுக்குத் தூண்டி விட்டபடி அவர் பின்னும் அங்கேயே நீடித்து இருந்தார். ஆனால், இறுதியில் வலங்கைக் காவற்கூடத்திலிருந்து மேடஓரை (நள்ளிரவு ஒருமணி) அடித்த ஓசை அவர் செவிப்பட்டது. அதன் மேலும் தன்னை அந்நிலையில் யாரும் பார்த்துவிடக் கூடாதே என்ற எண்ணத்துடன் அவர் மெல்லத் தன் அறைக்கே நடந்தார். ஆனால், அவர் கண்கள் நெடுநேரம் துயில்கொள்ள முடியவில்லை. கண்கள் மூடியபின்னும் விடிய நெடுநேரத்துக்கு முன்னே துயில் அவரை விட்டோடிற்று.

காலைக் கதிரவன் வந்து பலகணி

மேலெழுந்த போதும் கண்டிலன் போதம்!

என்ற கவிதையஞ் செல்வி ஈசேயின் அடிகளுக்கிசைய, காலைத் திருவெழுச்சியின் வண்ணக் கூறுகளில் கூட அவர் கருத்து செல்லவில்லை. பேரரச மேடை மீது காத்திருந்த வற்றல் தனி உணவைக்கூட அவர் கைகள் தொடமறுத்தன. உணவு வகைகள் என்னென்ன என்பதையே ஏறிட்டு நோக்காதவராய் அவர் கவலையில் ஆழ்ந்தார். உணவு வட்டிப்போர், வகைப்படுத்து வோர் தம் தலைவர் நிலைகண்டு ஏக்கமுற்றனர். பணி நங்கையரும், பணி மைந்தரும் அவர் ஏதோ விசித்திர நோன்பு மேற் கொண்டிருப்பதாக எண்ணினர். 'கொண்டு வந்த உணவைக் கொண்டு போகிறோமே, என்ன பொருளற்ற

வேலையாய் விட்டது நம்பணி!' என்று அவர்கள் ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டனர்.

தம் குடிமக்களின் முணுமுணுப்பில் அவர் கருத்துச் செல்லவில்லை. அவர்களைப் பற்றிய கவலைகளிலிருந்து நழுவி, அவர் மென்மேலும் தம்மைப் பற்றிய கவலையிலேயே கருத்தழிந்து வந்தார். இன்ப வாழ்வுக் காலத்திலேயே அரசியலைப் புறக்கணித்து வந்தார் என்ற அவச்சொல்லுக்கு அவர் ஆளாகியிருந்தார். அதே கறை இப்போது முன்னிலும் பெரிதாகத் தொடங்கிற்று. வேறொரு தேசத்துச் சக்கரவர்த் தியைப் பற்றிப் பேசுவது போல மக்கள் அவரைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். நாட்கள், மாதங்கள் இவ்வாறு கழிந்தன. அவற்றின் முடிவில் இளவரசன் பேரவைக்குக் கொண்டு வரப்பட்டான். இதற்குள் அவன் ஈடும் எடுப்புமற்ற எழிலிளஞ்