உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

29

வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் படியே விரைவில் அவள் உயிர் உடற்கூட்டை விட்டு அகன்றது. சக்கரவர்த்தியை மீண்டும் துயர மேகங்கள் சூழ்ந்தன. ஆனால் இப்போது இளவரசனுக்கு வயது ஆறாயிற்று. நிகழ்ச்சிகளை ஓரளவு உற்றறியும் பருவம் எய்தி விட்டதனால் அவன் தன் வாழ்வில் முதல் தடவையாக ஆறாத்துயரால் விம்மி விம்மி அழுதான். பல ஆண்டுகளாகத் தன்னிடம் அன்பு காட்டிய அப்பெருமாட்டியின் உயிரற்ற சடலத்தைக் கண்முன் கண்ட காட்சி - இதை அவன் நெடுநாள் மறக்கவில்லை. பின்னாட்களில்கூட அவன் அதை நினைத்தவுடன் துக்கத்துள் தோய்ந்து புலம்புவதுண்டு.

இந்நாள்முதல் இளவரசன் அரண்மனையிலே தங்கி

வாழ்ந்தான்.

வயது ஏழானதும் அவன் கல்வி பயிலத் தொடங்கினான். படிப்பில் அவனது விரைந்த முன்னேற்றங்கண்டு தந்தை வியப்பில் ஆழ்ந்தார். இனி இந்தத் துணையற்ற சிறுவனிடம் யாரும் கடுமை காட்டமாட்டார்கள் என்பதையும் அவர் உணர்ந்தார். ஆகவே கோக்கிடன் சீமாட்டியின் அறைக்கும் மற்ற அரண்மனைப் பகுதிகளுக்கும் அவனைத் தாராளமாக இட்டுச்செல்லத் தொடங்கினார். இப்போது அவன் தாய் இவ்வுலகில் இல்லை. 'தாயற்ற இப்பிள்ளையிடம் அன்பு காட்டத் தவற மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்' என்று அவர் பேரரசின் மன்னுரிமைச் சீமாட்டியரிடம் அவனைப் பற்றிப் பரிந்துரைப்பார்.

இவ்வாறு அரண்மனையின் பலவகை மறைதிரைகளையும் விலக்கி இளவரசன் எங்கெங்கும் திரிந்து பழகினான். கரடு முரடான வாழ்க்கைப் பாதையில் பழகிய போர்வீரர், வெறுப்பிலேயே வளர்ந்த வன்கணாளர்கூட, பால் வடியும் அச்சிறுவனின் மதிமுகத்தைக் கண்டதும் தம்மை யறியாமலேயே அதில் ஈடுபட்டு நகைமுகம் காட்டினர்.கோக்கிடன் சீமாட்டிகூட அவனை வரவேற்காமல் ஒதுக்கிட முடியவில்லை. அவளுக்கு இரண்டு புதல்வியர்கள் இருந்தார்கள். இளவரசன் அழகுக் கவர்ச்சியில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர்களிடம் காண இயலவில்லை. அவன் நடை, நயம்,பெண்டிரிடம் அவன் காட்டிய அறியாப் பருவத்தின் கூச்சம் ஆகியவற்றின் கவர்ச்சியில் ஈடுபட்ட