உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

37

புத்துருவெடுத்தது. வடிவழகிகளென்றே பொதுவாகப் பாராட்டப் பெற்றிருந்தனர். ஆயினும் இவ்வகையில் அவர்கள் கெஞ்சி இளவரசனுக்கு ஈடானவர்களல்லர். அவன் தோற்றத்திலும் நய நாகரிக நடையழகிலும் ஈடுபட்டுப் பொது மக்கள் யாவருமே அவனை 'ஹிகரு கெஞ்சி' அதாவது 'ஒளிதிகழ் கெஞ்சி' என்று புனைந்துரைத்தனர். கெஞ்சியைப் போலவே புஜித்சுபோ இளவரசியையும் யாவரும் உச்சிமேற்கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர். அவளை அவர்கள் ‘மின்னும் கதிரொளி இளவரசி' என்று விதந்துரைத்தார்கள்.

அச்சீமாட்டியின் பிள்ளைகள்

இளமையின் வாயிற் படியிலும் கெஞ்சியின் வடிவமைதி பெரிதும் குழந்தை நலமிக்கதாகவே இருந்தது. அவசரப்பட்டு ஆடவர் உடைபோர்த்து அக்குழந்தைப் பருவநலனைக் கெடுப்பது வெட்கக்கேடானதென்றே எவரும் கருதினர். ஆயினும் முறைப்படி அவன் பன்னிரண்டு வயதை எட்டிவிட்டதனால், நிறை ஆடவரின் உடை அணியும் விழாவுக்குரிய பருவம் வந்துவிட்டதென்பதை எவரும் ஒத்துக் கொண்டனர். எனவே, சக்கரவர்த்தி அதற்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது எவரும் வியப்படையவில்லை. ஆனால், சக்கரவர்த்தி எவரும் எதிர்பார்த்திராத அளவில் தளராமுயற்சியுடனும் ஆர்வத் துடனும் அவற்றில் ஈடுபட்டார். பொதுவாக அதற்கு மதிப்பிடப்பட்டிருந்த எல்லைமீறி அதில் பகட்டாரவாரத்தைக் காண அவர் துடித்தார்.

சென்ற ஆண்டிலேயே பட்டத்து இளவரசனின் உடையணிவிழா தென்மாளிகையில் நடைபெற்றிருந்தது. அதில் ஒரு சிறிதும் குறைபடாத அரும்பெருஞ் சிறப்புகளுடன் இவ்விழாவும் நடந்தேறிற்று. அதற்காகப் பல்வேறு அரங்கங்களில் நடைபெற்ற விருந்துகளையும் கருவூல, கூல அரங்க ஏற்பாடுகளையும் சக்கரவர்த்தி தாமே தம் நேர் மேற்பார்வையில் வைத்து நடத்தலானார். பணியாளர் எங்கே நன்றாகக் கவனிக்காமல் விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் எவரையும் அப்பொறுப்பில் விட்டுவிட்டு ஒதுங்கியிருக்கத் துணியவில்லை. இதனால் விழா அப்பழுக்கில்லாமல் முழுநிறை நேர்த்தியுடன் நிறைவேறிற்று.