உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

49

முதலில் எளிதான காரியமன்று. ஏனெனில், உயர் மதிப்புடை யவர்கள் சில சமயம் மிகக் கீழ் நிலைக்குத் தாழ்த்தப்பட்டு விடுவதுண்டு. நேர் மாறாக, மிகச் சாதாரணமான குடியில் பிறந்தவர்கள் பெரிய பணி முதல்வர்களாக உயர்வு பெற்று விடுவதைக் காண்கிறோம். அவர்கள் இறுமாந்து உயர் வகுப்பினராகச் சொக்கித் திரிவர். தம் பழைய இல்லங்களையும் முற்றிலும் புதுப்பித்து இவர்கள் உயர்ந்தவர்களிடமிருந்து தம்மை வேறு பிரித்தறிய முடியாதபடி செய்து விடுவார்கள். இத்தகைய நிலைகளில் உன் ஆராய்ச்சி முறை எப்படிச் செயலாற்றுமோ?' என்று அவன் கிண்டலாகக் கேட்டான்.

இச் சமயம் ஹிதரி நோ உமா நோ கமியும், தோஷிAபு நோ ஜோவும் வந்து நண்பர்களுடன் கலந்து கொண்டனர். தாமும் நோன்பு மேற்கொள்வதற்காகவே அரண்மனைக்கு வந்ததாக அவர்கள் கூறினார்கள். அவர்கள் இருவருமே காதல் கேளிக்கைகளில் மிகவும் நாட்டம் உடையவர்கள், நல்ல இன்ப உரையாடலில் ஆர்வம் உடையவர்கள். ஆகவே தோ நோ சூஜோ கெஞ்சி கேட்ட கேள்விகளை அப்படியே அவர்கள் வசம் கூறி, அவற்றுக்கு அவர்களிடமே விளக்கம் நாடினான்.

அவர்கள் மறுமொழி இச்செய்திகளை ஒளிவு மறைவு இன்றி அலசி ஆராய்வதாகவே அமைந்தது.

6

முதல் முதல் உமா நோ கமி பேசினான்.

ஒரு பெண்மணி எவ்வளவு பெரும் பதவிக்கு உயர்வுற்றாலும், அவன் பிறந்த குடியே உயர்ந்ததல்லவானால் உலகம் அவளை மதியாது. உயர் பிறப்புடையவர்களாய் இருக்கும் உயர் தகுதியுடைய பெண்களையே உலகம் மதிக்கும். அதே சமயம் காலக் கேட்டால் உச்ச மதிப்புடைய உயர்குடி நங்கை துணையற்ற நிலையில் இன்னா இடர்களுக்கு ஆளானால், அவள் உள்ளத்தின் உயரிய பயிர்ப்பும் தகுதியும் விரைவில் மறக்கப்பட்டு விடும். உலகில்அவள் ஏளனத்துக்கு உரியவள் ஆகிவிடுதல் உறுதி. ஆகவே எல்லா வழிவகைகளையும் ஆராய்ந்து பார்த்தால், இவ்விருவகை அணங்குகளையுமே நாம் நடுத்தர வகுப்பில் தான் சேர்க்க வேண்டும். அத்துடன் "சூர்யோக்கள்”, அதாவது தொலை மாகாணங்களில் சென்று உழைக்கும்படி அனுப்பப் படும் பணிமுதல்வர்களின் பெண்களும் இதுபோல நடுத்தர