உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அப்பாத்துரையம் - 22

அற்பமாகத் தோற்றும் சிறு செய்திகள், கலை நுட்பங்கள் அவளிடம் எதிர்பாராத, இயற்கை மீறிய உயிர்த் துடிப்புடைய முழு மெய்ம்மைகளாக விளங்கும். ஒரோவொரு கலைத் துறையில் உலகிலேயே எவரும் எங்கும் காணாத முழுநிறை ஆற்றலுடன் அவள் நம் உள்ளம் புளகாங்கித மடைய, உடல் புல்லரிக்கச் செய்து விடுவாள்.

'வடுவிலாக் குடிமரபில் வந்த உங்களைப் போன்றவர்கள் இத்தகைய காட்டு மலர்களை உங்கள் கவனத்துக்குக் கீழ்ப்பட்டவை என்று ஒதுக்கிவிடக் கூடும். ஆனால், என்னளவில் என் உள்ளத்திலிருந்து இவ் உருவத்தைத் துரத்திவிட முடியாது' -இவ்வாறு கூறுகையில் உமா நோ கமி தன் அருகிலிருந்த ஷிகிபு நோ ஜோவை ஒருக்கணித்து நோக்கியது போலிருந்தது.ஷிகிபுவும் ஒரு கணநேரம் தன் தங்கையருள் ஒருத்தியைத்தான் இவ் வருணனைகள் குறித்தனவோ என்று எண்ணினான். ஆனால் அவனும் இதுபற்றி வாய் திறந்து பேசவில்லை'

கெஞ்சியின் விழிகளைச் சுற்றித் துயிலின் தெய்வம் மெல்ல நிழலாடி வந்தது. ஆனால், அரைத் துயிலிலும் அவன் ஏதோ பேசத் தொடங்கினான். 'உச்ச உயர் வகுப்பிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுப்பது இவ்வளவு சிரமமானால்..... இவ்வளவு.. சிரமமானால்' வாசகத்தின் பிற்பகுதி அவன் வாய்க்குள்ளாகவே ஏதோ உருவிலா ஓசையாக வெளிவந்தது. அவன் அத்துடன் கொட்டாவிவிட்டான், மெல்லக் குறட்டை விட்டு உறங்

கலானான்.

கெஞ்சி இச் சமயம் மெல்லிய வெண்பட்டினாலான அங்கி அணிந்திருந்தான். தோள் மீது மயிர்க் கற்றைகளாலான ஒரு முரட்டு மேலாடை மெல்ல நழுவிக் கிடந்தது. அரையில் ஆடையை இறுக்க உதவிய அரைக் கச்சையும் கட்டு நெகிழ்ந்து சோர்ந்து கிடந்தது. விளக்கின் பக்கமாகச் சாய்ந்து படுத்த நிலையில் அவன் வடிவழகை நோக்க, அவன் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந்தானில்லையே என்று எவரும் எண்ணத்தோற்றும். பெண்ணினத்தை வகைப்படுத்தி, அதில் தனி ஒரு வகுப்பின் தனி மாதிரியாக உமா நோ கமி முழுநிறை அழகாரணங்கு ஒருத்தியைக் கற்பனை செய்திருந்ததாகக் கண்டோம். அந்தக் கற்பனை அழகாரணங்குகூடக் கெஞ்சி போன்ற ஓர் இளவரசனுக்குப்