உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் - 22

குறைவாயிருக்குமானால், அதற்காக அவள் பாசத்தில் இன்னும் சிறிது குறைபாட்டைக்கூட நான் விரும்பி வரவேற்றிருக்கக்கூடும்.'

அவள் சந்தேகங்கள் ஒருசிறிதும் தளராமல் பெருகிக் கொண்டே வந்தன. அதுபற்றி என் சிந்தனையும் பெரிய தாயிருந்தது. ஆயினும் எதற்கும் பற்றாப் பேர்வழியாகிய என்மீது அவளது இடைவிடாத பாச ஆர்வத்தை என்னால் எண்ணிப் பார்க்காமலிருக்க முடியவில்லை. அதனால் நான் அவள் மீது பரிவுகொண்டேன்.நான் மட்டும் சற்றுப் பொறுமை காட்டி வந்தால் எப்படியும் சில நாட்களுக்குள் அவள் தன் ஓயாச் சந்தேக மனப்பான்மையைக் கட்டுப்படுத்தத் தொடங்கி விடுவாள் என்று கருதிக் கொண்டேன்.

‘எனது மிகச் சிறுசிறு தேவைகளைக்கூட நான் எண்ணிப் பார்க்கத் தொடங்கு முன்பே முன்னறிவுடன் கண்டு நிறை வேற்றுவது அவள் வழக்கம். தன்னிடம் ஏதேனும் சின்னஞ்சிறு குறைபாடு இருப்பதாகத் தோன்றினாலும், அதை நீக்கவே அவள் அருமுயற்சி செய்து; வந்தாள். அப்படியும் ஏதேனும் ஒரு சிறு பண்பில் அவள் என் விருப்பங்களுக்குப் பின்னடைய நேர்ந்தால், அதை நான் கண்டு மனக் குறைப்படாமலிருக்கும்படி தடுத்து மறைத்துக் கொள்ளவும் அவள் இடையறா முயற்சி எடுத்துக் கொண்டாள். இவ்வாறு பல்வேறுவகைகளிலும் அவள் என் நலன்களைப் பெருக்கவே பாடுபட்டு வந்தாள்.

என் விருப்பப்படி ஒவ்வொரு சிறு பனித்துளியளவு செய்திவரை சரிவர நடத்தப்பட்டால், அவற்றால் என் உள்ளத்தில் ஏற்படும் நிறைவே அவள் தனிப்பட்ட குறைகளுக்கு ஈடு செலுத்திச் சரி செய்து, அக்குறைகள் என் உள்ளத்தை உறுத்தாமலிருக்கக் கூடும் என்று அவள் அன்பார்வத்துடன் நம்பியிருந்தாள்: உண்மையில் அவளைப் பிறர் கண்டுவிட்டால் அவளைப் பற்றி அவர்கள் கொள்ளும் மதிப்புக் குறைவுகள் எனக்கு மனவருத்தந் தரப்படாதே என்பதற்காக அவள் வெளியே தலைகாட்டுவது கூட இல்லை.

‘பொதுநிலை மட்டான அவள் தோற்றம் எனக்குப் பழகிப் போய்விட்டது. இந்நிலையில் இந்த ஒரு பொறுப்பற்றதனம் மட்டும் இல்லாமலிருந்தால் அவள் நற்பண்புகள் காரணமாக மொத்தத்தில் எனக்கு அவள் மீது முழுமன நிறைவே