உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 22

இதைக் கூறும் சமயம் தோ நோ சூஜோவின் கண்கள் நீர் ததும்பிக் கலங்கி நின்றது.

'சரி, மலருடன் அவள் செய்தி எதுவும் அனுப்ப வில்லையா?' என்று கெஞ்சி கேட்டான்.

தோ நோ சூஜோ மறுமொழி கூறினான்.

'அவள் எழுதியது இது. “மலைவாணர் காட்டுவேலி முள்வேலியே யானாலும், அதன் மீது சிறிது கண்ணோட்டம் செய்தருளுக. ஏனெனில் அதனருகே ஏந்தல் மலர் இனிதாக வளர்கின்றது”

"இக்கடிதம் கண்டதே நான் விரைந்து அவளிடம் சென்றேன். வழக்கம் போலவே அவள் என்னிடம் எதுவும் கடிந்து கொள்ளவில்லை. அவள் முகத்தில் வாட்டம் மிகுதியா யிருந்தது. அந்த இடத்தின் கவர்ச்சியற்ற தனிமைச் சூழலும் அதில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஏக்கமளிப்பதாகவே இருந்தன. அவற்றினிடையே பழங்கதைகளில் வரும் துயரார்ந்த அரசினர் செல்வியாகவே அவள் காட்சியளித்தாள். இந்நிலையில் நான் அவளை மகிழ்விக்க எண்ணினேன். குழந்தைக்காகவல்ல, அதன் தாய்க்காகவேதான் நான் வந்தது என்ற குறிப்புக் காட்ட முயன்றேன். இதற்காகக் “குழந்தை மலர்” என்று புனை பெயர் கொண்ட அப்பூவை என் பாடலில் “பாயல் மலர்” என்ற மற்றப் புனை பெயரால் குறிப்பிட்டேன். அவளும் அதே பெயராலேயே குழந்தையைச் சுட்டித் தன் மொழிப் பாடலில் அப்பாயல் மலரின் பிறப்பின் போது ஏற்பட்ட கொடும் புயல் பற்றி மெல்லச் சுட்டினான்.

ஆயினும் அவள் என்னிடம் மென்னயத்துடனேயே பேசினாள். நேரடியாகக் கோபம் கொள்ளவில்லை. அவளை மீறி ன்றிரண்டு துளி கண்ணீர் விழுந்தபோது அவற்றைக்கூட என்னிடமிருந்து மறைக்க அரும்பாடுபட்டாள்.என் நடத்தையால் அவள் கொண்ட துன்பத்தைவிட, அவள் துன்புறுவதாக நான் கருதுவது பற்றியே அவள் பெரிதும் துயரடைவதாகத் தோற்றிற்று. இதன் பயனாக, அவளை விட்டுச் செல்லும் போது என்மனம் அமைதியாகவே இருந்தது. நான் திரும்பி வரும் காலத்தை இதுவே இயல்பாக நீட்டித்தது. ஆனால், இறுதியில்