உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 23

காட்ட. காதல் ஆயிரம் குறை செய்யும், ஆயிரம் குறை ஏற்கும்! நீ ஒப்பற்ற மனைவியாகத் தான் இருந்திருக்கிறாய். ஆனால் நான் விரும்பித் தவங்கிடப்பது மனைவிக்காக அல்ல, மனைவியின் காதலுக்காக, வேட்கையுற்றவன் விரும்புவது தண்ணீர். அது பொன் கலத்திலிருக்க வேண்டுமென்பதில்லை; மண் கலத்தி லிருந்தாலும் போதும், என் உள்ளத்தின் வேட்கையை மேஹருடன் வாழும் வாழ்வு தணிக்காது. அவளை விட்டுச் சாவது ஒருவேளை தணிக்கலாம். போய் வருகிறேன், மேஹர்!

(செல்கிறான்)

நூர்: என் தெய்வமே, என்னை மன்னிப்பாயாக.நீ மனிதனல்ல, தெய்வம். நீ என்னை உணர்ந்துவிட்டாய். போய் வா. (பெருமூச்சு விட்டு) காதலுக்கு பக்தி எந்த அளவு ஈடுசெலுத்தக் கூடுமோ, அந்த அளவு உன்னை என் நெஞ்சில் வைத்து வணங்குகிறேன். ஆனால் தெய்வங்கள் கூடப் பக்தியை விரும்புமா? உன்னைப் போலவே காதலைத்தானே விரும்பக் கூடும்! (ஆழ்ந்து நினைந்து) ஆனால் நான் காதலிக்கிறேனா? யாரை- அந்தோ, அந்தோ!

காட்சி 8

(பர்துவான் நகர்ப்புறப் பாதை. ஷேர்கான் குதிரை மீதும், வங்காள முதல்வர் குதூப் யானைமீதும் செல்கின்றனர்.) குதூ+ப்:பர்துவானை நான் இதற்குமுன் கண்டதில்லை. மிக

நல்ல காட்சி.

ஷேர்: ஆம்

குதுப்: ஒரு வார்த்தையிலேயே பேசுகிறீர்கள் இன்று உங்களிடம் ஏன் மகிழ்ச்சி இல்லை?

ஷேர்: மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சி எதனையும் நான் எதிர்பார்க்க வில்லை, ஐயனே!

குதுப்: (யானையை நிறுத்திச் சட்டென) வீரர்களே எழுங்கள்!

(திரை மறைவில்)