உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

(லைலாவும் ரேவாவும் செல்கின்றனர்)

87

ஜஹாங்: நான் எத்தனை கேவலமான பொருளாகி விட்டேன். ஒரு பெண்ணின் அழகு என்னைச் சுட்டெரிக்கிறது. தந்தை இருக்கும்போது தந்தைதான் தடை என்று நினைத்தேன். பின் ஷேர்கான் தான் தடை என்று நினைத்து அவனைக் கொன்றேன். மற்றொரு பெண்ணின் அடம், அழுகை, கண்ணீர்- நாலு ஆண்டுகள் என்னைத் தடுத்து அடக்குகிறது.. ஆம். சரி, இதுதான் வழி. அஸஃவ்வை அடுத்துக் கேட்போம். இதில் கடைசி மூச்சு வரை முயலாமலிருக்கப் போவதில்லை.

காட்சி 13

(அரண்மனை, இரவு நேரம், நூர்ஜஹானும் தோழியும்

உரையாடுகின் றனர்.)

நூர்: லைலா மூலம் இறுதியாக என் கோரிக்கை ஈடேறிவிட்டது. இப்போது எங்கே போவேன்? எனக்கு யார் இருக்கிறார்கள்? ஆனால் நான் போவேன் - போகாத உயிரை வைத்துக் கொண்டு நான் எனக்குத் தெரிந்த ஏதேனும் தொழில் செய்தாவது பிழைக்கிறேன். என் ஈடெடுப்பற்ற கணவன் வீடு சென்று, அவர் அடித்தாமரையில் என் உள்ளம் பதித்து எஞ்சிய என் வாழ்நாளைக் கழிப்பேன். இதுவே எனக்கு உள்ள வழி.

தோழி: அம்மா, பேரரசி ரேவா வருகிறார்கள்.

நூர்: (தனக்குள்) ஆ... - உள்ளமே பொறுத்திருந்து பார். (வெளிப்பட) சரி, பார்க்கிறேன், வரச்சொல்.

(தோழி செல்ல, ரேவா வருகிறாள்)

ரேவா: மேஹர், உனக்கு ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன்.

நூர்: என் விடுதலை உங்கள் அன்புப் பரிசு என்பதை அறிவேன், அரசியே. உங்கட்கு என் நன்றி.

ரேவா: மன்னிக்க வேண்டும். நான் இதுகூற வரவில்லை. பேரரசியாக உனக்கு விருப்பம் உண்டா? உண்டானால் சொல். அப்பதவி உனக்கு எளிதாக வந்திருக்கிறது. இதில் உன் விருப்பம் அறியவே வந்தேன்.