உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 23

அஸஃவ்: நீ மட்டும் பிச்சைக்காரியாவது பற்றி இப்படிக் கூறவில்லை, மேஹர்.பேரரசர் கூறிவிட்டார், நீ அவரை ஏற்றால், அப்பா பதவியும் என் பதவியும் உயரும். இணங்காவிட்டால், இருக்கும் பதவியும் போய் விடுமாம்.

நூர்: ஓகோ, நீ என்னுடன் பிறந்தவன்! என்னை விற்றுக் குடும்பத்தை உயர்வுபடுத்தத் தயங்கவில்லை. அப்படித்தானா?

அஸஃவ்: உனக்கு எப்படி வேண்டுமானாலும் வாயடி அடிக்கத் தெரியும். உன் லைலா உன்னையும் அதில் தோற்கடித்து விடுவாள். என்னைப் பேச்சில் வெல்வது இருக்கட்டும். நான் நீ சொல்வதைப் பேரரசிடம் சொல்ல வேண்டும். என்ன சொல்கிறாய், மேஹர், முடியாதா?

நூர்: (சட்டென மாறி) எனக்குச் சொல்ல என்ன இருக்கிறது? என் மனம் போலவா எல்லாம் நடக்கிறது, என் மனம் போலவா என் கணவர் ஆக்ராவுக்கு வந்தார்? உன் மனம் போலத்தான் வந்தார். என் விருப்பப் படியா அவர் இறந்தார்? என் விருப்பப்படியா நான் ஆக்ராவுக்கு வந்தேன்? இப்போதும் நான் என் விருப்பப்படியா போகிறேன்? அல்லது நீ இங்கே பேசிக் காண்டிருக்கிறாய்? எல்லாம் என் விதியின் சுழல். அதன்படி நடக்கட்டும்.

அஸஃவ்: என்ன சொல்கிறாய். மேஹர்; ஒன்றும் புரியவில்லையே.

நூர்: புரியத் தேவையில்லை. நீ விரும்புகிறாயா? அப்பா விரும்புகிறாரா? முதலில் அதைச் சொல்.

அஸஃவ்: எதை?

நூர்: பேரரசரை நான் மணம் புரிவதை.

அஸஃவ்: ஆம். விரும்புகிறார்.

நூர்: அப்படியானால் உங்கள் விருப்பப்படி நடக்கட்டும். அஸஃவ்: உன் விருப்பம்?

நூர்: என் விருப்பம் எனக்கே தெரியவில்லை, அஸஃவ், விட்டபடிநடக்கட்டும்.