உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 23

ஜெஹாங்: நூர்ஜஹான்!

நூர்: (வணக்கம் செய்து) வணக்கம், பேரரசே!

ஜெஹாங்: நூர், நீ பேரரசி யாவதற்கென்றே பிறந்தவள், உன் வணக்க முறை பேரரசிக்குரிய இயற்கை வீறு உடையதாயிருக்கிறது.

நூர்: அரசே, ஏனிந்த வீண் புகழ்ச்சி? நானும் பேரரசிதான். ரேவாவும் பேரரசிதான். ஆனால் பசப்பு இங்கே; பாசம் அங்கே. உண்மையில் நான் பேரரசரின் மனைவி என்று மட்டும்தான் கருதப்படுகிறேன். அவள்தான் பேரரசி.

ஜெஹாங்: ஏன் அப்படிச் சொல்கிறாய், நூர்?

நூர்:

ஏனா, இளவரசன் குஸ்ரூ குற்றவாளியாகத் தண்டிக்கப்பட விருந்தும் தாங்கள் தண்டிக்கவில்லை. ரேவாவின் பிடிவாதத்திற்காகத் தானே?

ஜெஹாங்: ரேவா அப்படி என்னிடம் வாய்திறந்து கேட்கக்கூட இல்லை. அவள் கண்ணீர் அவள் துயரத்தை எடுத்துக்காட்டிற்று. அவள் வருந்தாதிருக்கத் தண்டனையை மாற்றினேன்.

நூர்: அவள் வாய்திறவாமலே அவள் பக்கம் தீர்ப்பு. என் வளர்ப்புப் பிள்ளை சபீ உல்லாவுக்காக நான் வற்புறுத்தி வாதாடினேன். அப்போது உங்கள் நடுநிலைநெறி பற்றி வீம்படித்தீர்கள்.

ஜெஹாங்: சபீஉல்லா உன் வளர்ப்புப் பிள்ளைமட்டும் தான். குஸ்ரூ ரேவாவின் வயிற்றுப் பிள்ளை; என் பிள்ளை! இதை வ்வளவு பெரிதாகக் கருதலாமா? உனக்கு ரேவா மீது பொறாமை மிகுதியாயிருக்கிறதென்று கருதுகிறேன்.

நூர்: பொறாமை ஏற்பட இருவரும் சமநிலையுடைய வர்களா, என்ன?

ஜெஹாங்: இதில் ஒப்பிடுவதற்கே ஒன்றுமில்லை, கண்ணே! ரேவா நம்மிடமிருந்து உயரத்தில் நெடுந்தொலைவிலுள்ள ஒரு விண்மீன். நீ என் அருகிலிருக்கும் முழு நிலா, அவளை மதிக்கிறேன். உன்னிடம் அன்பு செலுத்துகிறேன்.

நூர்: ஓகோ! சரி, சரி.