உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

95

எழிலெலாம் உன் எழில்

இசையெலாம் உன் இசை

(ஓ ஓ என்)

முழுமதி வடிவிலும் முளரியின் நிறத்திலும்

விழுமிய நின்திரு மேனியே காண்பேன்

(ஓ ஓ என்)

பொதியைத் தென்றலின் மணத்தினில், குயிலின்

இசையினில் உன்உளம் காண்பேன்

(ஓ ஓ என்)

(குர்ரம் வருகிறான்.)

குர்ரம்: யாரது, உன் உள்ளம் கவர்ந்தது?

கதிஜா: (திடுக்கிட்டு) யார்?- ஆ, என் காதலரேதான். வாருங்கள்.

குர்ரம்: எளிதாகத் திருட்டுப் பட்டம் சுட்டிவிட்டாய்! உன் உள்ளங் கவர்ந்தவன் நான் என்று இதுநாள்வரை எனக்குத் தெரியாதே!

கதிஜா: (அவன் இரு கைகளையும் தன் இரு கைகளால் பற்றி இழுத்து) பேரரசர் மரபின் உள்ளத்தைத்தான் யார் கவர்வார்கள் என்று தெரிவது கடினம். எங்கள் உள்ளமெல்லாம்...

குர்ரம்:போதும், கதிஜா, உங்கள் பரம்பரையும் அதில் குறைந்த

புதிர் அல்ல.

கதிஜா: ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?

குர்ரம்: உன் தந்தை அஸஃவ்வும் நூர்ஜஹானும் உடன் பிறந்தவர்கள். ஆயினும் நூர்ஜஹானின் பிள்ளை லைலா எங்கள் பரம்பரையைக் கருவறுக்க எண்ணுகிறாள். அதே பரம்பரையில் பிறந்த நீ என்னைக் காதலித்து மணம் செய்யத் துணிந்து விட்டாய். நீ பெண்மையிலும் காதலிலும் உள்ளத்தை ஈடுபடுத்துகிறாய். அவள் புதியதோர் அலெக்ஸாண்டர் ஆக எண்ணுகிறாள்.

கதிஜா: நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையன்று. லைலா சஹரியாரைக் காதலிக்கிறாள் என்பதை நான் அறிவேன்.

குர்ரம்: அப்படியானால் சஹரியாருக்காக நான் இரங்கு கிறேன். இந்த எரிமலையைக் கட்டிக்கொண்டு அத்தென்றல்