உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

நினைத்துக்கொள்.

நூர்: லைலா!

101

லைலா: ஆம், அம்மணி! நீ பழிக்குப் பழிவாங்கவில்லை. பழி சூழ்கிறாய். உன் வழியில் இனி எனக்குத் துளியும் தொடர்பு வேண்டாம்.

(போகிறாள்)

நூர்:பேரரசி!

ரேவா: நூர்ஜஹான், எனக்கு உன்மீது கோபமில்லை. என் பிள்ளை இறந்த துக்கம் போதும் எனக்கு. நீயும் கொலை செய்ததற்கு வருந்துகிறாய் என்று காண்கிறேன். கடவுள் உன்னை மன்னித்தருள்வாராக. ஆனால் தாய் இன்பம் ஒன்றன்றி வேறின்பம் காணாத எனக்கு ஏன் இப்பேரிடியைக் கடவுள் தரவேண்டும், ஏன் இந்தப் பேரிடி எனக்கு?

(போகிறாள்.)

நூர்: பேரரசி ரேவாவின் பகைமையை நான் வெல்ல முடியும். ஆனாலும் அவள் பொறுமை என்னைச் சிறிது நேரமாவது மலைக்க வைத்து விடுகிறது. போதும் இது.

காட்சி 20

(அரண்மனைத் தோட்டம். லைலா பாடுகிறாள்.)

லைலா:

இருளிலும் பூத்து வாடுமோ- இன்ப நறும்பூ

இருளிலும் பூத்து வாடுமோ

(இரு)

காதலின் புன்னகை பூத்திடு முன்னே

காரிருள் நஞ்சுபடர்ந்து கவிந்தது

தென்றல்வாவி மென்மலர் நகைக்கத்

திரள்புயல் அடர்ந்து திடுமெனப் பகைக்க

(சஹரியார் வருகிறான்)

(இரு)

சஹ: உன் இனிய பாட்டுக் கூடத் துயரமூட்டுகிறது. துயர்ச்

செய்திகளை நீ அறிவாயா?