92
அப்பாத்துரையம் - 24
காலகூடப் பாறை டூவ்ரே! ஹான்வேயிலிருந்து ஒருகல் தொலைவை அவன் நீந்திவிடலாம். டூவ்ரேயிலிருந்து கரை இருபத்தைந்துகள்!
பிறரறியாமல் நீந்திச் செல்லும் எண்ணத்தில் மண் விழுந்தது. அதுமட்டுமல்ல. இப்பக்கம் கப்பல் வருவதே அரிது. அதற்குப் பலநாள் காத்திருக்கவேண்டி வரலாம். அதுவரையில் தங்குவது எப்படி உணவுக்கு- குடிநீருக்கு என்ன செய்வது?
ஒரு துண்டு அப்பம், ஒரு துளி தண்ணீர் இல்லாத இடத்தில் எழுபத்தையாயிரம் வெள்ளி இருந்து என்ன பயன்?
அவன் உள்ளம் உடைந்தது. அவன் நடிப்புக் குலைந்தது.
நெடுநேரம் சிந்தித்த பின் எப்படியாவது பாறையின் உச்சி சென்று அப்பக்கம் கடந்து செல்லும் கப்பல்களைச் சைகை காட்டி அழைப்பது என்று முடிவு செய்தான்.
டூவ்ரே இரண்டு வரிசையாக நீண்டு கிடந்தது. கப்பல் முட்டியது அதன் வெளி முனையிலேயே. இரண்டு வரிசைக்கும் டையே இடுங்கிய கடற்கால் கிடந்தது. அதன் மறுகோடியில் ரு வரிசைகளையும்விடப் பலமடங்கு உயர்ந்த ஒரு பாறை இருந்தது. அதன் உச்சியில் முன் ஒரு மனிதன் உணவின்றிக் கிடந்து மாண்டு எலும்புக்கூடானான். அது முதல் அது மனிதப் பாறை எனப்பட்டது.
இந்த மனிதப் பாறைக்கு நீந்திச் செல்லும் எண்ணத்துடன் குளூபின் அமிழும் கப்பலிலிருந்து கடலில் குதித்தான்.
குதித்த வேகத்தில் அவன் கடலின் ஆழமற்ற அடித்தலம் வரை சென்றான். அதன்பின் அவன் நீர்ப்பரப்புக்கு வர இருந்தான். அதற்குள் யாரோ, எதுவோ, காலைப்பற்றி இழுத்தது.
அவன் மீண்டும் கடலினுள் சென்றான்.
எழுபத்தையாயிரம் வெள்ளியை அரையில் சேர்த்த
வண்ணம் அவன் கடலில் அமிழ்ந்து சென்றான்.
கடற்பரப்பில் அலைகள் பேய்ச்சிரிப்புச் சிரித்தன.