உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 24

"இயந்திரம் தான் கப்பலில் விலையுள்ளது அதை மீட்டால், கப்பலழிந்தாலும் அழிய வில்லை என்றே கூறலாம்!" இவ்வாறாகப் பலர் பலவாறாகப் பேசினர்.

“டியூராண்டின் இயந்திரம் ஒரு இரவு முழுவதும் கெடாது இருக்கும் என்று நான் உறுதி கூறுவேன். ஆனால் அதை மீட்டுக்கொண்டு வரத்தக்க வீரன் உலகில் இருக்க முடியாது" என்றான், டியூரான்டின் ஒரு கப்பலோட்டி.

லெத்தியரி இப்போது முதல் முதலாக வாய் திறந்தான். “மீட்டுக்கொண்டு வரத்தக்க வீரன்மட்டும் இருக்கக்கூடுமானால்...

அவன் முடிப்பதற்குள், டெரூசெட் “அவனை நான் மணந்து கொள்வது உறுதி” என்றாள்.

கில்லியட் அருகில் நின்றிருந்தான். “இது உறுதி தானா, டெரூ!” என்றான்.

அவள் வியப்புடன் ‘ஆம்' என்று தலையசைத்தாள்.

லெத்தியரியின் கண்களில் ஒளி வீசிற்று. அவன் “அத்தகைய வீரனுக்குக் கட்டாயம் டெரூசெட் சொந்தமாவாள். கடவுளறிய இதை நான் உறுதி கூறுகிறேன்” என்றான்.

அடுத்த கணம் கில்லியட் அங்கே இல்லை!

எங்கும் கில்லியட் மயம்!

ன்

இரவில் முழுமதி வானில் ஒளி வீசிற்று.ஆயினும் கடலகத்தில் படகுகள் எதுவும் செல்லத் துணியவில்லை.டியூராண்டின் முடிவு அவ்வளவு அச்சம் ஊட்டியிருந்தது. அத்துடன் நண்பகலில் சேவல் கூவிற்று என்று செய்தியும் பரவிற்று. இது தீமையின் அறிகுறி என்று கெர்ஸ்னி மக்கள் எண்ணினர்.

ஆனால் ஒரே ஒரு படகு இந்த இரவிலும் துணிச்சலாக நடுக்கடலை நோக்கி விரைந்து சென்றது. கரையை நாடி விரைந்துவந்த மீன் படவர் அதைக் கண்டு வியந்தனர்.

கடற்கரையில் மீன்படவர் சேரிகள்தோறும் கடலில் அதன் பாய்கள் கண்டு பெண்டிர் மூக்கில் கை வைத்தனர். 'பேய்போல, கடலில் செல்வது, அதுவும் நள்ளிரவில் செல்வது யார்?' என்று அவர்கள் மலைத்தனர்.