உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

(106

அப்பாத்துரையம் - 24

பற்றின்றி அறையில் அடைபட்டுக் கிடந்தான். ஆனால் டெரூசெட் வாழ்வில் இப்போது புதிய மாறுதல் ஏற்பட்டிருந்தது. லெத்தியரிக்கு ஆறுதல் கூறப் பழைய ஊர்வட்ட முதல்வர் ஹொடும் புதிய முதல்வர் காட்ரேயும் வந்திருந்தனர். ஹொடு ஆறுதல் தரும் விவிலிய நூற்பகுதி ஒன்றை வாசித்தான். அதில் ரபெக்கா கண்களை உயர்த்தினாள். ஈசாக்கை அவள் கண்டாள்” என்ற பகுதியை ஹொடு வாசிக்கும்போதுடெரூசெட் கண்ணை உயர்த்தினாள். காட்ரே அவளைப் பார்த்தான். அவள் உள்ளத்தில் அவளை அறியாமல் அதுமுதல் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவளையும் அறியாமல் அது சமயப் பற்றாக வளர்ந்தது. அவள் வாரம் ஒருமுறைகூடக் கோயிலுக்குப் போகாதவள். வாரம் இருமுறை செல்லத் தொடங்கினாள். விவிலிய நூலில் அக் கரையற்றவள் அது பற்றிய காட்ரே விளக்கவுரையை எழுத்துவிடாமல் கேட்டாள். வீட்டில் அதே பகுதியை மீண்டும் மீண்டும் படித்தாள்.

குளூபின்

ராந்தேனிடமிருந்து

பெற்ற பணத்தை லெத்தியரியிடம் கொடுக்கமாட்டாள் என்பது ராந்தேனுக்குத் தெரியும். ஆகவே லெத்தியரியிடம் குளூபின் பணம் பெற்ற செய்தியைக் கூறுவதே அவளிடம் பழிவாங்க வழி என்று அவள் எண்ணினாள். ஆகவே தொலைசென்றதும் இது செய்தியை ய லெத்தியரிக்கு எழுதியிருந்தான். அதை வாசித்த லெத்தியரி மீண்டும் அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் கொண்டான். இதனால் அவன் உறங்க முடியவில்லை. பலகணி வழியாகக் கடற்காற்று வாங்கிய வண்ணம் துறைமுகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் கண்களில் அவன் உயிரினும் அரிய டியூராண்டின் புகைப்போக்கி தெரிந்தது. அவன் ஓடிச்சென்று பார்த்தான். இயந்திரமும் கப்பற் சட்டமும் அப்படியே இருந்தன. இதனை இங்கே கொண்டுவந்த அராபிக் கதைப் பூதம் எதுவோ என்று திகைத்தான்.

அது பூதமாயிராமல் மனிதனாயிருந்தால், கில்லியட்டே யாக வேண்டும் என்று கருதி, அவனை அழைக்கத் துறைமுகத்தின் மணியை அவசர அவசரமாக அடித்தான்.

கில்லியட் இதேசமயம் உள்ளத்தை முழுதும் டெரூசெட்டின்பால் ஓடவிட்டுக்கொண்டு தோட்டத்தில்