உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மூல ஆசிரியரைப் பற்றி

ஐரோப்பிய இலக்கிய உலகில் காலவரிசைப்படி தென்திசை முன்னணியில் நின்று வழிகாட்டிற்று. ஆனால், 19-ம் நூற்றாண்டுக்குள் நார்வேயில் இப்ஸனும், ஸ்வீடனில் ஸ்ட்ரின்ட்பர்க்கும் வடதிசையிலும் இலக்கியப் புகழ்க்கொடி நாட்டினர். ஆகஸ்ட்ஸ்ட் ரின்ட்பர்க் 1849-ல் பிறந்து 1912வரை வாழ்ந்தார். ஸ்வீடனில் அவர் தோற்றுவித்து வழிகாட்டிய வாழ்வியல் இயக்கம் 1880 முதுதல் 1890 வரை போட்டியற்ற நிலையில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அவர் புகழ் குன்றாமல் வளர்ந்து வருகிறது. அவர் ஸ்வீடனின் தலைசிறந்த நாடக ஆசிரியர். ஆனால் புனைகதையிலும் சிறுகதையிலும் அவர் புகழ் சிறந்ததன்று. வாழ்வியல் கலைஞர்களுள் அவர் தனியிடம் பெறத்தக்கர். அவர் தீமையைத் தீமையாகக் காட்டிக் களிக்கும் கலைஞரன்று. அதைத் தீமை என்று விளக்கி, அதை ஒழிக்கும் வகையில் மக்கள் ஆர்வத்தைத் தட்டியெழுப்பும் முறையில் அவர் கலை அமைந்தது.

1890 முதல் 1900 வரை வாழ்வியல் இயக்க அலைக்கு எதிரான புனைவியல் இயக்க அலை வீசிற்று. இக்கால எழுத்தாளர்களுள் பெல்லே மோலின் ஒருவர். இவர் 1864-ல் பிறந்து தம் 32-ம் ஆண்டிலேயே இயற்கையெய்தினார். இக்குறுகிய காலத்திற்குள் இவர்தம் தாயகமான வடக்கு ஸ்வீடனிலுள்ள பனிமலைநாட்டு வாழ்வைச் சித்தரித்துக் காட்டி இலக்கியத்தில் இறவா இடம்பெற்றார்.

இருபதாம் நூற்றாண்டின் கலைஞர் மீண்டும் ஸ்ட்ரின்ட் பர்க்கின் வாழ்வியல் முறையையே நோக்கினர். ஆயினும், ஸ்ட்ரின்ட்பர்க் ஆர்வம் காட்டிய சீர்திருத்தங்கள் செயல் வெற்றி பெற்றதால், அவ்வார்வம் வரவரக் குறைந்தது. ஆனாலீனா