உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. கல் மனிதன்

இன்று படகுத் துறையிலிருந்து கடலின் திசையில் பார்ப்பவர்களுக்கு இடதுகைப் பக்கமாகப் பச்சைப் பசேலென்று காடுகள் நிறைந்த ஒரு குன்று தென்படும். பல ஆண்டுகளுக்கு முன் இம்மலை பச்சைப் பசேலென்றில்லை. காடுகளோ புல்லோ கூடக் கிடையாது.ஒரே கட்டாந்தரையாகவும் கற்பாறையாகவும் அது காட்சியளித்தது.

அப்பாறையின் பின்புறம் ஒரு இடமகன்ற கட்டடத்தைக் காணலாம். அது ஒரு விசித்திரமான கட்டடம். தூரப் பார்வைக்கு அது ஒரு சிலந்தி போலவே தோன்றும். ஏனென்றால் சிலந்தியின் உடற்பகுதி போன்ற நடுக்கட்டடத்தைச் சுற்றி எட்டுக் கட்டடங்கள் சிலந்தியின் கால்கள்போல் நீண்டு கிடந்தன. சிலந்தியின் வடிவம் போலவே, அதன் பண்புகளிலும் சில அந்தக் கட்டத்துக்கு உண்டு. அதற்கு நாற்புறமும் காணவல்ல எண்ணற்ற கண்கள் உண்டு. நாடெங்கும் அது வலை விரித்திருந்தது. அதில் சிக்கி அச்சிலந்திக் கட்டடத்திற்குள் செல்கிறவர்கள் திரும்பி வருவதே கிடையாது.

அதன் அருகே ஆள் நடமாட்டம் காண்பதரிது.

அது ஒரு சிறைக்கூடம். சிறு சிறைக்கூடமன்று; தலை நகரத்திலுள்ள அரசாங்கச் சிறைக்கூடம்.

மனித உலகின் நடுவிலே, மனித உலகுடன் தொடர் பில்லாமல் இருந்த ஒரு தனிச் சிற்றுலகம் அது. அதில் வாழ்பவர்- வாழ்பவர் என்ற சொல் அவர்களுக்குப் பொருந்தாது- அதில் காலந் தள்ளுபவர் பலர் தாங்கள் வெளியுலகில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டவர்கள். மறக்கா விட்டாலும் பிறந்த உலகைப் பகைத்து வெறுத்தவர் சிலர். வெளி உலகின் நீதி வேறு; அவ்வுலகின் நீதி வேறு. வெளி உலகில் மன்னன் ஆட்சி உண்டு. கடவுள் ஆட்சியும் உண்டு. உள்ளே இரண்டும் கிடையாது. ஒரு