உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(116) ||.

அப்பாத்துரையம் - 24

வேண்டும். உறக்கத்தை அவன் எதிர்பார்த்து வாழவில்லை. உறங்கவிடப்பட்டபோது விடப்பட்ட நேரத்திலும் இடத்திலும் அவன் உறங்கியாக வேண்டும். இன்பம் எப்படி இருக்கும் என்பதையே அவன் மறந்துவிட்டான். ஆகவே அவனுக்குத் துன்பமும் கிடையாது. துன்பம் என்று வெளியார் கூறுவதுதான் அவனுக்கு வாழ்க்கையாக இருந்தது. அதில் இல்லாத இன்பம் என்ற ஒன்றை அவன் காணும்போது, அவன் நினைவுகொள்ளும் போதுதான் அவனுக்குத் துன்பம் ஏற்பட முடியும்.

அவனுக்குத் தரப்பட்ட வேலை கல்லுடைப்பது. காலை, நண்பகல், காலை, சில சமயம் இரவு சென்ற பின்னும் அவன் இயந்திரம்போல அதே வேலையைத் தொடர்ந்து செய்தான். மழைகாலம், வெயிற்காலம், பனிக் காலம் மூன்றிலும் அவன் வேலையில் மாற்றம் இல்லை. உணவும் உறக்கமும் இந்த வேலையிடையே ஒரு வேலையாகவே அவனுக்கு இருந்தது.

இன்ப துன்ப வேறுபாடற்ற அவனுடைய இந்த வாழ்வின் போக்கிலும் அவன் ஒரு புதிய இன்ப நாட்டத்தை வகுத்திருந்தான். அதுவே வெளி யுலகத்தில் முன்பு அவனுக்குப் பழக்கமான காட்சிகளைப் பார்ப்பது.குளிர் காலத்தில் இத்தகைய காட்சி மிகுதியில்லை. சிறைக்கூடத்திலிருந்து பார்க்கும்போது துறைமுகம் வெறும் துறைமுகமாகமட்டுமே இருந்தது. ஆனால் வேனிற் பருவத்தில் புத்தம் புதிதாக வண்ணச் சாயமடிக்கப்பட்ட படகுகள் அலைகள்மீது தவழ்ந்தன. அவற்றில் ஸ்வீடனின் அழகிய கொடிகள் பறந்தன. அவன் அவற்றில் ஏறிச் செல்லா விட்டாலும் அவன் பார்வை அவற்றில் ஏறிச் சென்று மகிழும். கரையோரத்தில் குளிர் காலத்தில் கப்பும் களையுமாயிருந்த புங்க மரங்கள் தளிர்த்துத் தழைக் கைகளை ஆட்டி நடனமாடும். சின்னஞ்சிறு பையனாயிருக்கும்போது அவன் தந்தையுடன் அத்தகையதொரு புங்கமரத்தடியில் இருந்து மகிழ்ந்தது அவன் நினைவிற்கு வரும். அந்த இலைகளின் நறுமணமும் அந்தத் தழைகளின் மெல்லிய இசையும் அன்று வாழ்க்கையுடன் வாழ்க்கையாக இருந்தது. இன்று அவற்றின் நினைவே இன்ப நினைவுகளின் சின்னமாயிருந்தன. அவன் புலன்கள் அவ்வின்பக் காட்சிகளையும் நுகர்ச்சிகளையும் தொலைவி லிருந்து இப்போது நாடும்.