118
அப்பாத்துரையம் - 24
போல, இளந்தென்றலின் ஒரு மூச்சு அவர்களிடையே வீசிற்று. உணவின் தரம் சற்று உயர்ந்தது. கட்டுப்பாடு சிறிது தளர்ந்தது. பலர் ஒரு கொட்டிலில் அடைபட்டிருந்த முறை மாறி ஆளுக்கு ஒரு அறை தரப்பட்டது.
வெளி உலக நீதியின் முதல் தாக்குதல், மன்னன் உள்ளத்தில் மலர்ந்த அன்பு மலர்ச்சியின் முதல் விளைவு அது. அம்மலர்ச்சிக்குச் சீர்திருத்தவாதிகள் எழுத்தாளர் பலர் உதவியிருந்தனர். ஆனால் இரு சாராரிடமும் கைதிகளுக்கு நன்றி ஏற்படவில்லை. இன்பம் அளிக்கப் பட்டவன். துன்பந்தரப்பட்ட போது எப்படிச் சீறுவானோ அப்படி அவர்கள் துன்பமாற்றிச் சிறிது இன்பந் தரப்பட்ட போது சீறினர்! நம்பிக்கைக்கு இடமில்லாத நிலையில், இருள் சூழ்ந்த வாழ்வில் இருந்து அவர்கள் பழகிவிட்டனர். சிறிது ஒளிவந்தபின் அவர்கள் அரை ஒளி முன்னைய இருட்டை விடக் கொடியது என்று நன்றி கெட்டவர்களாய், நாக்கில் நரம்பற்றவர்களாய்க் கூறினர். முன் கேட்கப்படாத குறையீடுகளும் முறையீடுகளும்- உணவு மோசம். உடை மோசம். காவல் கொடுமை என்பன போன்ற குற்றச் சாட்டுகளும் எழுந்தன.
ஒருநாள் நகரெங்கும் பைத்தியக்காரர்கள் சேர்ந்து விழாக் கொண்டாவது போன்றிருந்தது. நகரின் மணிகள் யாவும் கலகலத்தன. ன. சிறுமணிகள் சிற்றொலிகளுடன் குலவின. அவற்றிடையே பெரிய மணிகள் முழங்கின. நகரக் கோவிலின் பாரியமணி அவை அனைத்தையும் உள்ளடக்கி வீறிட்டு முழங்கிற்று.அதுமட்டுமன்று. சிறைக் கைதிகளுக்குக் கூட ஓய்வு தரப் பட்டது. ஒருநாள், அவர்கள் வாழ்நாளிலேயே முதல் நாளாக, அவர்கள் கல்லுடைக்காதிருந்தனர்.
அன்று மன்னன் ஆஸ்கார் உலகு நீத்த நாள்- முதன்முதல் சிறைக்கைதிகள் நிலையைச் சீர்திருத்திய மன்னன் உயிர் நீத்த நாள். இந்நாளில் அவர்கள் கட்டுப்பாடு பின்னும் தளர்ந்தது- ஒருவருடன் ஒருவர் பேசக்கூட அனுமதிக்கப்பட்டனர். அதனை அவர்கள் பயன்படுத்திய வகை விசித்திரமாயிருந்தது- அவர்கள் மாண்ட மன்னனைப் பழித்துத் தூற்றினர்!
"மன்னன் நீதியுடையவனல்ல. நீதியுடையவனாயிருந்தால், நம்மை விடுவித்திருப்பானல்லவா?” என்றான் ஒருவன்.