உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

முடைநாறும் அளறு!!

இவையே நாளை

சோலை! சோலை! சோலை!

பசுந்தழை, பொன்மலர்

இன்கனிப் பொழிலே!!

அப்பாத்துரையம் - 24

பாட்டை யார் பாடினார்கள்? அது எப்படி உறக்கத்தில் கனவில் தனக்குக் கேட்டது? எதுவும் அவனுக்குத் தெரியாது. அதன் பொருள்கூட அவனுக்குத் தெளிவாய் விளங்கவில்லை. ஆனால் பாறை, சேறு, சோலை என்ற சொற்கள் அவன் உள்ளத்தில் பதிந்தன. பாறையை வெறுத்தது போலவே அவன் சேற்றையும் வெறுத்தான். சோலையே அவன் கனவு. பாறையும் சேறும் சோலை யாகுமா? ஆவது எப்படி?

எண்ண அலைகள் அவனை உணர்வுலகுக்கு இழுத்து வந்தன- பாறை பாறையாகத்தான் இருந்தது. அவன் கனவுக்குக் காரணமான பசுங்கொம்புகூடச் சற்று வாடித்தான் இருந்தது.

அடுத்த நாள் ஆவலுடன் மாலையில் அவன் அப்பக்கம் எட்டிப் பார்த்தான். கொம்பு முற்றிலும் உலர்ந்து போய் விட்டது.

அவன் மீண்டும் துன்பத்தில் ஆழ்ந்தான்.பழைய வாழ்க்கை மீண்டும் தொடங்கிற்று.

இது நெடுநாள் நீடிக்கவில்லை. ஒரு புது மாறுதல் ஏற்பட்டது.

சிறைக் கைதிகள் சிறைக்கூடத்தை விட்டுப் பகல் நேரங்கள் தோறும் கொண்டு செல்லப்பட்டனர். வற்றற் பாறையை விட்டு நெடுந்தொலை கொண்டு செல்லப்பட்டனர்.நகர்ப்புறத்திலுள்ள ஒரு பழைய குளம் சேறும் கூளமும் படிந்து நாறிக்கிடந்தது. கைதிகள் அதைத் தூர்த்தெடுக்கும்படி ஆணையிடப்பட்டனர்.

சேறு, அழுகிய இலை தழைகள், உடைந்த கலங்கள் பக்கத்திலுள்ள மெழுகுதிரிச் சாலையிலிருந்து வழிந்தோடிய கொழுப்பின் அழுகிய இழுதுக்குழம்பு, மற்றொருபுறமிருந்து மருந்துச் சரக்குச் சாலையின் நெடிவீசும் செத்தை, தோல் தொழிற்சாலையின் தோல் துணுக்குகள், வண்ணார் சேரியிலிருந்து வந்த சவுக்கார நீரழுக்கு, தையல் கடைகளிலிருந்து