உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

151

ஆர்வவேகத்தின் முன் ஆறு வழிவிட்டது. பனிப்பாறைகள் விலகின. ஓலாவின் செயலற்ற உடலைத் தாங்கிய பின்பே அவள் மூச்சுவிட்டாள். இனி இறந்தால் ஒருங்கிறப்பது, மீண்டால் ஒருங்கு மீள்வது என்று அவள் துணிவு கொண்டாள்.

ருட்டினிடையேயும் தந்தையின் கண்கள் நடந்தவற்றை ஒருவாறு கவனித்தன. ஓலாவின் உயிருக்காக அவன் நெஞ்சம் இதுகாறும் துடித்துக் கொண்டுதானிருந்தது. இப்போது ஓலா, இம்பார் ஆகிய இருவருக்காகவும் அவன் உடல் முழுதும் துடித்தது. அவன் தன் தொலையை மறந்து, அவர்களுக்காகக் கதறினான். இக்கரையிலிருந்த பலரும் வந்து கூடினர்.

ஓலா கண்விழித்தபோது, அவன் தன் கண்முன் கண்ட காட்சிகளை அவனால் நம்ப முடியவில்லை. இரவு முழுதும் அவன் உயிருக்காக ஊசலாடியிருந்தான். அவனைப் பலிகொள்ள இருந்த புயல் விடியுமுன் ஓய்ந்திருந்தது. ஜக்ரிஸும் கெர்ஸ்டாப் குடும்பத்தவர் பலரும் ஆறு கடந்து வந்திருந்தனர். ஓலா, இம்பாரின் இல்லத்தில், அவள் அறையில் அவள் மடிமீது கிடந்தான். இம்பாரின் தாய் ஒருபுறமும், தந்தை ஒருபுறமும் இருந்து அவன் உயிர்பெற்றெழுவானோ என்று கவலையுடன் காத்திருந்தனர். ஓலாவின் தாய்கூட அங்கே வந்து கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள்.

அவன் கண்கள் இம்பாரின் கண்களை நோக்கின. அவற்றில் அவன் கண்ட ஆழ்ந்த உணர்ச்சி அவனுக்குப் புத்துயிர் தந்தது. அவன் எழ முயன்றான். அவள் அவன் தலைநீவி அவனைத் தாங்கி எடுத்தாள்.

ஜக்ரிஸ், “என் பிழையால் உன்னையும் இழக்க இருந்தேன். என் இம்பாரையும் இழக்க இருந்தேன். ஆனால் இருவரும் எனக்கு வாழ்வு தந்தீர்கள் என்று கூறி அவனை மகிழ்வுடன் அணைத்துக்கொண்டான்.

தன் துணிச்சலுக்கு ஜக்ரிஸே காரணம் என்று ஓலா கருதினான். ஆனால் ஓலா உயிர் பிழைத்ததற்கு இம்பாரின்

துணிச்சலே காரணம் என் று ஜக்ரிஸ் நினைத்தான்.

எல்லாவற்றுக்கும் ஓலாவின் வீரக் காதலே காரணம் என்று இம்பார் கருதினாள்.