உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

157

இச்சொற்கள் என்னைச் சுட்டன. நான் கலவரமடைந்து பேசாமல் நின்றேன்.

அவள் தொடர்ந்து “இதைப் பெறும்போது கூட நன்றி தெரிவிக்கிறானா, பார்!" என்று கூறி என்னை அதட்டி “வணக்கம் செய்து நன்றி கூறடா, மட்டி!” என்றாள்.

நான் வேண்டா வெறுப்பாக ஒரு சொல்லில் 'நன்றி' என்று கூறிவிட்டு ஓடிவிட்டேன்.

ரயாஸானின் ஒகா ஆற்றங்கரையருகே ஒரு சிறு மரக்குடிசை! அங்கேதான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். எனக்கு நினைவு ஏற்படுவதற்கு முன்பே என் தாய் இறந்து போயிருந்தாள். ஆகவே அத்தைதான் எங்கள் வீட்டுத் தலைவி. அவள் எல்லோரையும் திறம்பட அடக்கியாண்டாள். அதற்கேற்ப அவளிடம் கண்டிப்பும் கடுகடுப்பும் மிகுதி. சமயப் பற்று அவள் நகக்கண்களிலெல்லாம் வழிந்தோடும். அன்புப் பாசம் என்னவோ அவள் வாழ்க்கையை எட்டிப் பார்க்கவேயில்லை.

என் தந்தை பார்ஃவிரி பெட்ரோவிச்சுக்கும் அத்தையைப் பிடித்த தென்று கூற முடியாது. ஆனால் பெரும்பாலும் அவள் வழிக்கு அவர் வருவது மில்லை; போவதுமில்லை. அவர் அமைதியான பண்பும் அஞ்சிய நடையு முடையவர். அவர் உள்ளம் எப்போதும் ஏதோ ஒன்றில் ஈடுபட்டுக் குழம்பிக் கொண்டிருக்கிற தென்பதை அவர் கண்கள் ஓயாது எடுத்துக் காட்டின.

க்ைகடிகாரத்தின் செய்தியை அவர் கேட்டபோது அவர் முகத்தில் மகிழ்ச்சிக் குறி எதுவும் தோன்றவில்லை. அடுத்த தடவை நாஸ்டஸியைக் கண்டபோது அவர் பார்த்த பார்வை' "இதைக் கொடுத்தாடா ஏமாற்றப் பார்க்கிறாய்?" என்று கேட்பது போலிருந்தது.

எங்கள் சிற்றப்பா பிள்ளை டேவிடும் எங்களுடன் வாழ்ந்து வந்தான். சிற்றப்பா யெகோர் 1797-இல் நடைபெற்ற அரசியல் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு, ஸைபீரியா பாலைவனத்துக்கு நாடு கடத்தப் பட்டிருந்தார். தந்தையைப் போலல்லாது அவர் எடுப்பான தோற்றமும், சுறுசுறுப்பும்,