பிறமொழி இலக்கிய விருந்து -2
189
ம்
பெட்ரோவ்னா குடும்பத்தார் குழந்தையை மனமார வரவேற்றனர். வெல்ச்சானினாவின் உணர்ச்சி மிகுதி கண்டு கிளாவ்டியா பெட்ரோவ்னா வியப்புற்றாள். வெல்ச்சானினாவ் அவளைத் தனியாய் அழைத்துச் சென்று, தனக்கும் அக்குழந்தைக்குமுள்ள உண்மையான மறைமுகத் தொடர்பை விளக்கிக் கூறினான். கூறினான். அவள் முன்னிலும் பன்மடங்கு குழந்தையிடம் அன்பு காட்டினாள். ஆயினும் குழந்தை அயலார் என்று கருதியவர்களிடம் அன்பை எதிர்பார்க்கவில்லை. அவள் தன் அனாதை நிலைக்கான அதை இரக்கம் என்று கருதி அவமதிப்பாகக் கொண்டு, மேலும் உள்ளமழிந்தாள்.
குழந்தையிடம் பேசுவதிலிருந்து வெல்ச்சானினாவுக்குப் பல செய்திகள் வெளிப்பட்டன. பால்லோவ்ஸ்கியின் கொடுமையை அவள் ஒத்துக் கொண்டாள். ஆனால் கொடுமையின் எல்லை வெல்ச்சானினாவைத் தூக்கி வாரிப் போட்டது. தாயின்மீது பழி தூற்றி அவன்தான் தூக்கி லிட்டுக் கொள்ளப் போவதாக அடிக்கடி அந்தப் பச்சை மதலை முன் நடித்தானாம்! வேறிடம் வந்தும் தனக்கு இன்னும் அந்த அச்சம் இருந்து கொண்டிருப்ப தாகக் குழந்தை கூறிற்று.
பாவ்லோவ்ஸ்கியின்
முழு உள்ளமும்
அறிய வெல்ச்சானினாவ் துடித்தான். அவனைத் தேடியும் அவன் வரவுக்காகக் காத்தும் பல நாள் கிடந்து அவதியுற்றான். எதிர்பாராது நெடுநேரங்கழித்து அவன் வருவான். வந்தால் குடிவகைக்காகவே நயமும் பயமும் காட்டி கெஞ்சுவான். வெல்ச்சானினாவ் இல்லாதபோதுகூட அவன் வேலையாளிடம் நட்புரிமை பாராட்டி, குடித்துவிட்டு வெறியுடன் வீழ்ந்து கிடப்பான். குடிவெறியில் பேசியபோதும் அவன் ஆழ்ந்த சூழ்ச்சியுடனேயே பேசியதால், அவன் உள்ளத்தை உய்த்துணர வெல்ச்சானினாவினால் முழுதும் முடியவில்லை. ஆனால் நடல்யா இறக்கும்வரை அவள் இரகசியம் எதையும் அவன் அறியவில்லை என்றும், அவள் திடீரென்று இறந்ததால் அவள் காதற் கடிதங்களை அவன் வாசிக்க நேர்ந்ததென்றும், அதன் மூலம் பல செய்திகள் அறிந்ததாகவும் உணர முடிந்தது. அத்துடன் அவன் வெல்ச்சானினாவிடம் கொண்ட பகைமை ஒருபுறமும், அதனுடன் மாறுபட்டு அவனிடம் அவனுக்கு இருந்த கவர்ச்சி