பிறமொழி இலக்கிய விருந்து -2
191
செய்தான். விடிந்ததும் அவனைக் கூட்டிக்கொண்டு போக எண்ணினான். ஆனால் விடிந்த போது அவன் காணவில்லை. விடியுமுன்பே போய்விட்டான்! வெல்ச்சானி னாவுக்குக் கோபம் பாய்ந்துவந்தது. ஆனால் செய்வது ன்னதென்றறியாது துடித்தான்.
இதற்குள் பெட்ரோவ்னா இல்லத்திலிருந்து குழந்தை லிஸா இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. வெல்ச்சானினாவின் துன்பம் இப்போது கரைகடந்து அவனை மறதியில் ஆழ்த்தப் போதியதாயிருந்தது. ஆனால் இப்போதும் அவன் பாவ்லோவ்ஸ்கியைத் தேடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. உலகின் பார்வையில் இன்னும் பாவ்லோவ்ஸ்கியே லிஸாவின் தந்தை. அவன் தலைமையில்லாமல் பிண அடக்கம் செய்ய முடியாது. எனவே வெல்ச்சானினாவ் அவனைத் தேடிப் புறப்பட்டான்.
நாள் முழுதும் தேடிச் சடைவுற்று ஓரிடத்தில் கண்டான். கண்டும், அவன் தன்னால் வரமுடியாதென்று கண்டிப்பாக மறுத்துக் கூறிவிட்டான். வேண்டுமானால் அடக்கம் செய்யும் மதகுருவுக்குத் தான் இணக்கமும் வரமுடியாமைக்கு வருத்தமும் தெரிவித்து எழுதுவதாகக் கூறினான். இவ்வகையில் உலக நோக்குப்படி தந்தையான ஒருவன் சார்பில் உண்மைத் தந்தை இருந்து குழந்தையை, அடக்கம் செய்யவேண்டியதாயிற்று.
பாவ்லோவ்ஸ்கி கண்ணில் இனித் தான் விழிக்கவே கூடாது என்ற வெறுப்புடன் வெல்ச்சானினாவ் இடுகாட்டில் லிஸாவின் கல்லறையிலிருந்து வந்துகொண்டிருந்தான். அச்சமயம் பாவ்லோவ்ஸ்கி வந்து, இடையில் நடந்தவற்றை யெல்லாம் மறக்கடிக்கும் முறையில் வணக்கம் பலகூறினான். வெல்ச்சானினாவ் அவன்மீது சீறிவிழுந்தான். "உன் நட்பு எனக்கு வேண்டாம். என் கண்ணில் விழியாது அப்பாற் சென்றால் போதும். அதுவே நீ செய்யும் உதவி” என்றான்.
பாவ்லோவ்ஸ்கி “நானும் இதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இன்று எனக்கு நீங்கள் ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும். நம்மிருவருக்குமிடையே இருந்த அன்புள்ளம்- நடல்யா-பேரால் இதைக் கேட்கிறேன்" என்றான். வெட்கங் கெட்ட முறையில்