உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

213

ம்

அளந்துவிடலாம். எனவே திரள் திரளாக மக்கள் இம் மாளிகைக்கு வந்து கூடித் தங்கள் பொழுதை இன்பமாகக் கழிப்பார்கள்.

ஒருநாள் மாலை, இம்மாளிகையிலுள்ள விசிப்பலகை ஒன்றில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து இனிமையாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் உயரமானவன். பரந்த மார்பும், கட்டழகும் வாய்க்கப் பெற்றவன். அவன் நடையுடை பாவனை, பேச்சு வழக்கு ஆகியவற்றிலிருந்து அவன் ஜப்பான் நாட்டின் உயர்குடிப் பரம்பரையாகிய சாமுராய் வகுப்பைச் சார்ந்தவன் என்று கூறி விடலாம். உருண்டு திரண்டு விளங்கும் அவனுடைய இரண்டு தோள்கள் போர்ப் பயிற்சியின் சின்னங்கள்! சிங்க ஏறு போன்ற அக்காளை சின்சி மாகாண த் தலைவனின் அரசியல் துணைவன். பெயர் மியாகி அஸோஜிரோ என்பது. பிறந்தகத்தில் தொடக்கப் பயிற்சியும் படைப் பயிற்சியும் பெற்ற பின் அவன் தன் தாய்மொழி இலக்கியப் பயிற்சிக்காகக் கியோட்டாப் பல்கலைக் கழகம் நாடி வந்திருந்தான். அவன் இதயத்தில் ஜப்பானியக் கவிதைக்குத் தனி இடம் உண்டு. அம்மொழியில் கவிதை இயற்றுவதிலும், அதுபற்றி உரையாடுவதிலும் அவனுக்கு ஆர்வம் மிகுதி. அவனியற்றிய அழகிய இனிய பாடல்கள் பல. அவற்றுள் ஒன்றைத் தான் தன் இன்னுயிர்த் தோழனிடம் அவன் அப்போது படித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.

அஸோஜிரோவின் தோழன் உருவிலும் உடையிலும், அவனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டான் குள்ளமான அவன் உருவம் காவியாடையால் மறைக்கப் பட்டிருந்தது. அவன் ஓர் இளந்துறவி. புத்தமதத் துறவிகளின் கோட்பாட்டின்படி அவன் முகமும் தலையும் கண்ணாடிபோல் வழவழப்பாக மழிக்கப்பட்டிருந்தன. காவித் துண்டில் சுருட்டி வைக்கப்பட்ட ஒரு பொட்டலம் போலவே அவன் தோற்றம் காணப்பட்டது. ஆனால் இந்தக் காவித் தோற்றத்தின் மூலம் அத்துறவியின் உள்ளத்தையும் உயர்நலப் பண்புகளையும் ஊகித்து உணர்ந்து கொள்ள முடியாது. அவன் அஸோ ஜிரோவின் நண்பன்; அவனுக்கும் கவிதையில் ஈடுபாடு மிகுதி. எனவே அஸோஜிரோவின் இதய ஊற்றிலிருந்து எழுந்த இனிய