உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

215

தாவின. அவளும் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் பார்வை அவன் மதியைக் கொள்ளை கொண்டது. தென்றலுடன் கலந்து வந்த அவள் குரலினிமை அவன் காதின் வழியே பாய்ந்து அவன் நாடி நரம்புகளைத் தடவிச் சென்றது. அவனால் இருக்கை கொள்ள முடியவில்லை. தன் பாடல் நறுக்கைப் பெறும் சாக்கில் படகு நோக்கிச் செல்ல அவன் உள்ளம் துடித்தது.

நண்பனின் முகத்திரையிலே கணத்திற்குக் கணம் தோன்றிமறையும் மாறுதல்களைத் துறவி கண்டான். அவன் சிறிது புன்முறுவல் தவழ, “அன்ப, உன் பாடல்களில் ஈடுபட்டு, மயங்கி நான் என் மாலைக் கடன்களை மறந்து இருந்து விட்டேன். என் புத்த தேவனுக்கு நான் வணக்கம் செலுத்த வேண்டும். மற்றொரு சமயம் உன்னை வந்து காணுகிறேன். இப்போது நான் போய் வருகிறேன்" என்று கூறிப் புறப்பட எழுந்தான். குறிப்பறியும் தன் நண்பனின் உள்ளப்பாங்கிற்கு மகிழ்ந்து அஸோஜிரோ நன்றியுணர்வுடன் அவன் கையை மெல்ல அழுத்தி விடைதந்துவிட்டு, படகின் பக்கமாகத் தன் நடையைத் திருப்பினான்.

படகிலமர்ந்திருந்த பெண்மணி மியூகி என்னும் பெயர் உடையவள். அவள் தந்தை யூமினோசுகே சின்சி மாகாணத்தை அடுத்த அகி மாகாணத் தலைவனுக்கு நல்லமைச்சரயிருந்து வந்தார். அவர் தலைவனுடன் சிறிது மாறுபட்டு, தற்சமயம் கியோட்டா நகரின் மறுகரையிலுள்ள ஒரு சிற்றூரில், செல்வப் புதல்வி மியூகியுடன் வாழ்ந்து வந்தார். கியோட் டோப் பாலத்தருகிலுள்ள காட்சிகளைக் காணவே இன்று மியூகி தன் தோழி அஸாகேயுடன் வந்திருந்தாள். அஸோஜிரோ படகில் வந்து ஏறு முன் வேறு இருவர் அழையா விருந்தாய் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் துணையற்ற பெண்களை வேட்டையாடித் திரியும் வம்பர்கள். அவர்கள் மியூகியிடம் “தேன்மொழிப் பாவையே, உன் அழகு எங்களைக் கொல்லுகிறது. உன் திருக்கையால் எங்களுக்கு ஒரு கோப்பை இனிய தேறல் தந்து, உன் குளிர்ந்த சொற்களால் எங்களை மகிழ்விப்பாய்” என்று வற்புறுத்தத் தொடங்கினர்.

ஜப்பான் நாட்டுப் பெண்கள், தங்கள் உறவினர், அன்புக்குரியவர் ஆகியவர்களுக்கு மட்டுமே இத்தகைய