பிறமொழி இலக்கிய விருந்து -2
66
(253
'நான் இத்தனை தொல்லைகட்கு ஆளானாலும் என் உயிரையும் காத்து என் காதலியின் இறுதி நாளில் ஆதரவுந் தந்த உங்கள் குடிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? என் ஒரே கவலை இப்போது நான் என் மகளைக் கண்டு வாழ்த்த வேண்டியதுதான்.”
சாமுரோபியின் இச்சொற்கேட்ட மியூகி கண்கலங்கி "அந்தோ, அவளை நீங்கள் இழக்கவும் நானே காரணமாக இருந்தேன். எனக்காகத்தானே அவள் உயிர் நீத்தாள்.” என்று கதறினாள். பின் சிறிது சிறிதாக அவள் அழுது கொண்டே அஸாகே தன்னைத் தேடிவந்ததும், தன்னைக் காக்க உயிர் நீத்ததுமாகிய வரலாறு முழுவதும் கூறினாள். சாமுரோபி கண்கலங்கவில்லை. அவள் எதிர்பார்த்ததற்கு மாறாகக் களிப்புடனும் அமைதியுடனும் “ஆ, என் மகளே என் கடனில் பாதியை உயிர்கொடுத்துத் தீர்த்தாள். அவள் பிறந்தது முதல் இறப்பதுவரை அவளை நான் காணக் கொடுத்துவைக்கவில்லை. ஆனால் தன் தந்தையின் மரபை அவள் மெய்ப்பித்துவிட்டாள். அவள் எனக்காக விட்டுப் போன மீதிப் பங்கையும் நான் இதோ ஆற்றுகிறேன்?” என்று அப்பாற் சென்றார்.
'அவர் எங்கோ, ஏதோ காரியமாகப் போயிருக்கிறார்; வருவார்' என்று யாவரும் காத்திருந்தனர்.
'ஆ' என்ற ஒரு அலறல்கேட்டு திடுக்கிட்டோடினர்.
அனைவரும்
அடுத்த அறையில் சாமிரோபி தன் வாளினாலேயே தன்னைக் குத்திக் கொண்டு குருதி வெள்ளத்தில் கிடந்தார்.
மியூகி மீண்டும் துடிதுடித்தாள். ஆனால் சாமிரோபி அவளை அருகில் அழைத்து, “அம்மா நான் இனி இருந்து என்ன பயன்? என் பிரிவுக்கு நீ வருந்தாதே நான் மகிழ்ச்சியுடன் சாகிறேன். இதோ இங்கே வா?” என்று கூறி அவள் கையிலிருந்த மூட்டையை அவிழ்த்துக் கண்ணொளி தரும் மருந்தைத் தன் உயிர்க் குருதியில் தோய்த்து அவள் கண்ணில் தடவினார்.
மியூகி கண்ணொளி பெற்று யாவும் கண்ணெதிரில் கண்டாள். ஆனால் கண்பார்வை அவளுக்குக் களிப்பூட்ட