2. சூழ்நிலைகளை வெல்லல்
மனிதன் உள்ளம் ஒரு தோட்டத்தைப் போன்றது . அதை அறிவுடன் பண்படுத்தி ஒரு பூங்காவனம் ஆக்கலாம். அல்லது அதைக் கவனிக்காது புறக்கணித்து அதை ஒரு புதர்க்காடாக வளரவிடவும் செய்யலாம். ஆனால் எப்படியும் அது வளர்ந்தே தீரும். வளர்வதுஅதன் உயிர்ப்பண்பு. நாமாக நல்ல வித்திட்டுப் பேணினால், நல்ல பயிர் விளையும். நல்ல வித்திடாவிட்டால்,தீய களைவித்துக்கள் தாமாக வந்து விழுந்து, களைப்பயிர் காடாக வளரும். இதுபோல, உள்ளத்திலும் நல்லெண்ணங்களையும் நற்பயிற்சிகளையும் வளர்க்காவிட்டால், தீய எண்ணங்களும் தீய வழக்கங்களும் தாமாக எழுந்து பெருக்கமடையும்.
தோட்டக்காரன் ஒருவன் எப்படிக் களைகளை நீக்கித் தான் விரும்பும் மலர்கள், கனிகளை வளர்க்கிறானோ, அதுபோலவே மனிதன் தன் உள்ளத்திலுள்ள களை போன்ற பயனற்ற, தவறான, தீய கருத்துக்களை ஒழித்துப் பயனுடைய நேர்மையான நல்ல கருத்துக்களாகிய மலர், கனிவகைகளை முழுநிறைவுற வளர்க் கின்றான். இம்முறையைப் பின்பற்றிச் சின்னாட்களின் அவன் தன் உள்ளத்தின் தோட்டக்காரனும் அதன் வளர்ச்சியை இயக்கு பவனும் தானே என்ற உண்மையைக் கண்டுணர்கிறான். அத்துடன் தன்னுள்ளிருந்து இயங்கும் இயல்பமைதிகள் அவனுக்குப் புலனாகின்றன. அவற்றின் அடிப்படையில், தன் நினைவாற்றல்களும் மன ஆற்றல்களும் எங்ஙனம் தன் பண்பையும், தன் சூழல்களையும், தன் வருங்கால வாழ்வையும் மாற்றி அமைக்கின்றன என்பதை அவன் வரவரக் கணித்துக் காண்கிறான்.
எண்ணங்களின்
கருத்தும் பண்பும் பொருண்மைக்குப் புறம்பானதோ வேறானதோ அல்ல. ஆனால் சூழல்களிடையேயும் சூழ்நிகழ்ச்சி களிடையேயும்தான் பண்பு உருவாக முடியும். அவற்றினிடையே