உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 24 (270) ||__ __ பற்றிவிடாது.எனவே சூழ்நிலைகள் மனிதனை ஆக்குபவையல்ல. அவை அவன் இயல்பை அவனுக்குக் காட்டுபவை மட்டுமே.

நற்செயல்களுக்கும் சரி, தீச்செயல்களுக்கும் சரி, புறவாய்ப்புக்கள் மட்டும் போதமாட்டா. அவை இரண்டிலும் அவை வருமுன் அவற்றை எதிர்நோக்கிய நீடித்த ஆர்வமும் பயிற்சியும் இருக்க வேண்டும். புறநிகழ்ச்சிகள் இப்பயிற்சி யில்லாமல் சூழ்நிலைகள் ஆய்விடமாட்டா. ஆகவேதான் மனிதன் சூழ்நிலைகளை ஆக்கும் இயல்புடையவன் ஆகின்றான். அதே சமயம் புறநிகழ்ச்சிகள் தான் அவன் உள்ளார்ந்த இயல்புகளை அவனுக்கே காட்ட வல்லனவாகின்றன. ஏனெனில் உலகவாழ்வில் தோன்றும்போதே ஆன்மாவுக்குத் தன் உள்ளார்ந்த தூய்மை, தூய்மையின்மை ஆகியவற்றுக்கேற்ற சூழ்நிலை வண்ணங்களைக் கவர்ந்தீர்க்கும் ஆற்றல் உண்டு. தடுக்கப்படாத அல்லது தடுத்து மாற்றப்படாத அல்லது திரித்து உருவாக்கப்படாதவிடத்தில் இக்கவர்ச்சியாற்றல்கள் தக்க சூழ்நிலைகள் பெற்று வளர்ச்சி யடைகின்றன.

இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு செய்தி உண்டு. நாம் பொதுவாக விருப்பங்கள் என்று கூறுவது புறவிருப்பங்களையே. இவற்றையே நாம் பரு வடிவில் உணர அல்லது காண முடிகிறது; இவற்றுக்கெதிரான அகவிருப்பங்கள் நம் இயல்புடன் இயல்பாக, இயல்புக் கூறுகள் அல்லது தன்மைகளாக இயங்குகின்றன. எனவே சூழல்களினிடையே நம்மைக் கவரும் தன்மையுடைய செய்திகள் நம் புறவிருப்பங்கள் சார்ந்தவையல்ல. அவை நம் உள்ளார்ந்த அகவிருப்பங்களையே சுட்டிக் காட்டுபவை. இவற்றை உணர்ந்தவனே உண்மையில் தன்னை உணர்ந்தவன் ஆகிறான். இவற்றை இயக்குபவனே உண்மையில் தன்னை இயக்குபவன் ஆவான். அடிக்கடி மனிதர் நைப்பாசைகள், அவாக்கள், பேரவாக்கள் ஆகியவை மீட்டும் மீட்டும் தடைப்பட்டு முறிவடைவதைக் காண்கிறோம். இதன் காரணம் என்ன? இவ்விடங்களில் இவ்வவாக்கள் தம் சூழ்நிலையைத் தாமே மாற்றி அமைத்து வளரத்தக்கவை என்பதே.

புறவிருப்பங்கள் மனிதன் புறமனம் அதாவது மேலீடான அறிவுநிலை சார்ந்தவை. அகவிருப்பங்களோ அகமனம் அல்லது உள்ளம் சார்ந்தவை. புறவிருப்பங்கள் போலிச்செயல் அல்லது