12
அப்பாத்துரையம் - 24
அப்பா ஏன் கோபிக்க வேண்டும்!" என்று அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் அவன் கவலைப்படுவது கண்டு, அவள் கவலைப்பட்டாள். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு 'அண்ணா அண்ணா! எழுந்திரு. சூடாகப் பக்கடா செய்து வைத்திருக்கிறேன், ஆறிவிடும். வந்து உண்” என்றாள்.
66
“நான் இனி இத்தகைய பண்டங்கள் தின்னக்கூடாது.இனி உழைத்துத்தான் சாப்பிட வேண்டும்.”
66
என்ன அண்ணா, இது. து. உனக்காகத்தானே நான் சமைத்தேன். நான் செய்த பண்டத்தை நீ ஏன் தின்னக் கூடாது?”
“நீ சமைத்திருக்கலாம். ஆனால் இது அப்பா பணம்.
55
"பிள்ளை அப்பா பணத்தைச் செலவு செய்யாமல் வேறு யார் பணத்தைச் செலவு செய்வது?'
“அவர் பணம் உழையாது சம்பாதித்த பணம். உழைப்ப வரைச் சுரண்டிச் சம்பாதித்த பணம். அதை நான் தொட மாட்டேன்.'
""
நைனா காந்தியடிகளைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. செல்வர்கூட அவரை மதித்தனர் என்று அவள் அறிவாள். ஆனால்‘காந்தீயம்' என்பது என்ன என்று அவளுக்குத் தெரியாது. அமரின் தத்துவத்திலோ காந்தீயம் கடந்த சமதருமக் கருத்துக்கள் இருந்தன. அவள் உள்ளம் அதை அறியக்கூட வில்லை. சூடான பக்கடா வீணாக ஆறுகிறதே என்று மட்டும் அவள்
கவலைகொண்டாள்.
இச்சமயம் சுகதா அழைப்பதாக பணிப்பெண் அமரிடம் வந்து கூறினாள். அவன் மனைவி அவனை அழைத்தது அதுதான் முதல்தடவை; அதற்குமுன் அவ்வப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் காண்பதுண்டு. அவசியமான பேச்சுக்கள் பேசியதுண்டு. அவ்வளவுதான்.
'போகவேண்டுமா, வேண்டாமா?' என்று அவன் தயங்கினான். ஆனால் பணிப்பெண் அவனை ட்டுப்போகவே காத்திருந்தாள்.
அவள் பெயர் கௌசல்யா. அவளை எல்லாரும் சில்லு என்று கூப்பிட்டனர். அவள் அறிவு மந்தமுடையவள். அழவேண்டிய நேரம் சிரிப்பாள், சிரிக்க வேண்டிய நேரம்