உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. கனவார்வங்களும் கருத்தார்வங்களும்

கனவாளர்களே உலகின் காப்பாளர்கள். கண்கண்ட புறஉலகுக்குக் கண்காணா அகஉலகே ஆதாரமாயிருப்பதுபோல, செயல்துறையில் தன்னலச் சூழலில் உழன்று பழி சூழ்ந்து தேர்ந்து பயிலும் உலகவாழ்வு, அதனினின்று அகலவிலகித் தனித்துநின்று கனவு காண்பவர்களின் புனைவாற்றலொளியினாலேயே புரக்கப் பெறுகிறது. மனித இனம் இக்கனவாளர்களை மறக்க முடியாது. அவர்கள் புனைகருத்துக்களின் படிவங்களும் மனித உலகில் மங்கி மறுகக்கூடாது. உலகம் வாழ்வதும் வளர்வதும் அவற்றிலேயே! அவற்றை என்றேனும் ஒருநாள் பகலொளியாகக் காண்போம் என்ற நம்பிக்கையாலேயே - புறவாய்மையின் போலித் தோற்றம் கடந்த அவற்றின் அக வாய்மை மெய்ம்மைகளை எய்தப்பெறுவோம் என்ற இன்னார்வத்தாலேயே உயர்பண்பு பெற்று இயங்குகிறது.

-

-

உலகம்

இசைவாணர், சிற்பிகள், ஓவியக்கலைஞர், கவிஞர், அறிவர், முனிவர் வருங்கால உலகை ஆக்குபவர்களும் வான உலகெனும் கனவுலகைக் கண்டு அதற்கு உருவும் மெய்ம்மையும் அளிப்பவர்களும் இப்பலதரப்பட்ட கனவாளர்களே. அவர்கள் உலகில் வாழ்வதனாலேயே உலகம் பொலிவெய்துகின்றது. அவர்களில்லாவிட்டால், உலகம் இயற்கையின் மாயும் புறப்பகுதியுடன் புறப்பகுதியாய், மாய இயக்கம் இயங்கும் ஒரு மாய உலகமாகவே அமையும்; மாயா உலகமாக மலராது.

கவினுடைக்கனவொளியை அகக்கண்ணாற் காண்பவன், உள்ளத்தில் உயர் கருத்துப் படிவங்களுக்கு இடமளித்துப் பேணுபவன் ஆவான். அவன் ஒருநாள் அதனை மெய்ம்மையாகச் செயலுலகிற் கொண்டுவந்து தருதல் உறுதி. புதியதோர் உலகைக் காண கனாக்கண்டான் கொலம்பஸ்; புத்துலகக் கனா புத்துலகாக அவன் புறக்கண்முன்னும் மலர்ந்தது! கொப்பர்னிகஸ்