இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிறமொழி இலக்கிய விருந்து -2
309
மதிப்பையும் நேசத்தையும் பெருக்குகிறது. இங்ஙனம் அமைதி வளருந்தோறும் வெற்றியும் செல்வாக்கும் மிகுதியாகிறது. நன்மை செய்வதற்கான ஆற்றல் வளர்ச்சிபெறுகிறது. மனிதரின் வெற்றிக்கு அவர்கள் பெரும்பாலும் புற உணர்ச்சிகளை அடக்குவதே காரணம் என்பதை எல்லாரும் அறிவர். அக உணர்ச்சிகளையும் அடக்கியவன் இன்னும் பெருவெற்றியடை வான் என்பதில் ஐயமில்லை. தன்னடக்கம், அமைதி ஆகியவற்றை உடையவனுடனேயே எவ்வகைப்பட்ட மக்களும் பழக விரும்புவர்; எளிதாகப் பழகுவர்.