பிறமொழி இலக்கிய விருந்து -2
25
பார்த்தாள். உடனே அவள் முகத்தின் கோர உருவம் மாறிற்று. கத்தியை வீசி எறிந்தாள். தானே தன்னைப் போலீசிடம் ஒப்படைத்துக்கொண்டாள்.
அவள் வேறு யாருமல்ல. வயல்கரையில் படைவீரர் கொடுமைக்கு ஆளான நங்கையே? அவள் எதிர்பாராச் செயலும் எதிர்பாரா ஆற்றலும் எல்லாரையும் முதலில் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் எவரும் அவளைக் கண்டிக்கவில்லை. வெள்ளையர்மீது பரிதாபப்படவுமில்லை. அவள் செயலை எல்லோரும் போற்றினர். அவள் பெற்ற தண்டனைக்காக மட்டுமே பரிதாபப்பட்டனர்.
படைவீரர் நிகழ்ச்சி, டாக்டர் முதலிய நண்பர் செயல்கள் ஆகியவற்றைக் கேட்டது முதல், மக்களிடையே பெருத்த விழிப்பு ஏற்பட்டிருந்தது. அது இப்போது பெருக்கெடுத்தோடிற்று. கொலைசெய்த நங்கையின் பெயர் முன்னி. அவள் திடீரென்று மக்கள் வணங்கும் வீரமாது ஆனாள். அவளுக்கு என்ன ஆகும்? அவள் பக்கம் நேர்மை கிடைக்குமா? என்பதே எங்கும் பேச்சு.
போலீஸ் கோர்ட்டில் பலர் சான்று கூறினர். டாக்டர் தமக்குத் தெரிந்த விவரங்களை அப்படியே கூறினார். அவர் முன்னி சார்பாகப் பேசவில்லை என்று மக்கள் அவர் மீது சீறி எழுந்தனர். அமரோ அவளைத் தான் அங்கங்கே பார்த்ததுண்டு என்றும், அவள் நல்அறிவு நிலையில்லாதவள் என்றே தெரிவதாகவும் கூறினான். இது முற்றிலும் உண்மையல்ல. அவள் மீது கொலைக் குற்றமும் தண்டனையும் ஏற்படாமல் தடுக்கவே அவன் இவ்வாறு கூறினான். ஆனால் பொதுமக்களும் இதையே விரும்பினதினால், அவனை யாவரும் போற்றினர்.
முன்னியின் வழக்கு காசிமாநகரின் மிகப் பெரிய வழக்காயிற்று. அதன் ஆரவாரம் மாவட்டம் கடந்து மாகாணச் செய்தித்தாள்களையும் நிறைத்தது. பலர் அவளுக்காக வழக்கு நடத்த முன்வந்தனர்... கூலி யில்லாமல் உழைக்க வழக்கறிஞர் போட்டியிட்டுக் கொண்டு வந்தனர். வழக்குக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அறச்செயல்களில் ஈடுபட்டிந்து இரேணுகா அதன் தலைவியாளாள். சுகதாவும் அமரும் டாக்டரும் பிற நண்பரும் உடனிருந்து ஏற்பாடுகள் செய்தனர்.